fbpx

கிறிஸ்துமஸ் பண்டிகை – கேரளாவில் ரூ.230 கோடிக்கு மது விற்பனை!

கேரளாவில் கிறிஸ்துமஸ் பண்டிகையையொட்டி ரூ.230 கோடி மது விற்பனை செய்யப்பட்டுள்ளது.

தமிழகத்தில் டாஸ்மாக் – கேரளாவில் பெவ்கோ: தமிழகத்துக்கு டாஸ்மாக் போல கேரளாவுக்கு பெவ்கோ நிறுவனம் உள்ளது. கேரளா மதுவிற்பனையை ஒழுங்குபடித்தக் கூடிய நிறுவனம் இது. ஆண்டுதோறும் கேரளாவின் ஓணம், புத்தாண்டு உள்ளிட்ட பண்டிகை காலங்களில் மதுவிற்பனை வசூல் தொகையை அறிவித்தும் வருகிறது. கேரளாவில் ஓணம் பண்டிகை காலத்தில்தான் மதுவிற்பனை உச்சத்தை தொடும். ஆனால் இந்த முறை கிறிஸ்துமஸ் பண்டிகைக்கும் அதிக மதுவிற்பனை நடைபெற்றுள்ளது. கேரள அரசின் மது விற்பனை கழகமான பெவ்கோ சார்பில் 267 மதுக்கடைகள் மாநிலம் முழுவதும் செயல்பட்டு வருகின்றன.

கிறிஸ்மஸ் பண்டிகையன்று மட்டும் ரூ.89.52 கோடிக்கு மது விற்பனை: கிறிஸ்துமஸ் பண்டிகைக்கு 3 நாட்கள் முன்பாகவே மது விற்பனை அதிகரித்தது. இந்நிலையில் கேரளாவில் கிறிஸ்துமஸ் பண்டிகையையொட்டி கடந்த 23, 24 மற்றும் 25 ஆகிய தேதிகளில் ரூ.230 கோடிக்கு மது விற்பனை நடந்துள்ளதாக கேரள மதுபான கழகம் தெரிவித்துள்ளது. கிறிஸ்துமஸ் நாளான்று மட்டும் இம்முறை ரூ.89.52 கோடிக்கு மது விற்கப்பட்டுள்ளது. அதிகபட்சமாக கொல்லமின் ஆசிரமம் விற்பனை மையத்தில் ரூ.68.48 லட்சத்திற்கு மது விற்கப்பட்டுள்ளதாக பெவ்கோ அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

Kokila

Next Post

2023-ல் இருந்து கொரோனா பாதிப்பு விவரங்களை வெளியிடப்போவதில்லை – இங்கிலாந்து அரசு அறிவிப்பு

Tue Dec 27 , 2022
2023-புத்தாண்டில் இருந்து கொரோனா பாதிப்பு விவரங்களை வெளியிடப்போவதில்லை என இங்கிலாந்து அறிவித்துள்ளது. சீனாவில் கடந்த 3 ஆண்டுகளாக கடைப்பிடிக்கப்பட்டு வந்த கொரோனா கட்டுப்பாடுகள் ரத்து செய்யப்பட்டதை தொடர்ந்து அங்கு தொற்று பரவல் வேகமெடுத்தது. தற்போது பிஎப்.7 எனும் புதிய வகை கொரோனா பெரும் பாதிப்பை ஏற்படுத்தி வருகிறது. ஆனால் சீனாவில் தினமும் எத்தனை பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்படுகிறது, எத்தனை பேர் கொரோனாவால் உயிரிழக்கின்றனர் என்பது குறித்த தகவல்களை அரசு […]

You May Like