தமிழ் சினிமா ரசிகர்களால் மறக்கவே முடியாத ஒரு சம்பவம் என்றால், அது சுச்சி லீக்ஸ் தான். கடந்த 2016ஆம் ஆண்டு பாடகி சுசித்ரா தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில் சுச்சி லீக்ஸ் என்னும் பெயரில் தமிழ் சினிமாவின் அந்தரங்க பக்கங்களை வெளியிட்டு பரபரப்பை கிளப்பி வந்தார். தனுஷ், திரிஷா, இயக்குனர் ஷங்கர் என தமிழ் சினிமாவின் மிகப்பெரிய பிரபலங்களின் பெயர் எல்லாம் இதில் அடிபட்டு தமிழ்நாட்டையே அதிர வைத்தது.
இந்நிலையில், 8 ஆண்டுகளுக்குப் பிறகு தற்போது மீண்டும் சுச்சி லீக்ஸ் விவகாரம் குறித்து பாடகி சுசித்ரா ஒரு யூடியூப் சேனலுக்கு பேட்டி கொடுத்துள்ளார். அதில் தன்னுடைய முன்னாள் கணவர் கார்த்திக் ஒரு gay என்றும் தனுஷும் அவரும் தனியாக அறையில் என்னவெல்லாம் செய்தார்கள் என்பது எனக்குத் தெரியும் என்றும் கூறியுள்ளார். தொடர்ந்து சுச்சி லீக்ஸ் குறித்து பேசிய அவர், இந்த சுச்சி லீக்ஸ் விவகாரமே தனுஷ், த்ரிஷா மற்றும் அவர்களுடைய குரூப்பில் இருப்பவர்கள் சேர்ந்து செய்த பிராங்க் தான். அதில் நான் பலிகடா ஆனேன். என்னுடைய ட்விட்டர் ஐடியின் பாஸ்வேர்டை எடுத்து அவர்களே எல்லோ போட்டோவையும் அப்லோட் செய்துவிட்டு பின்னர் எனக்கு எதிராக நாடகம் ஆடினார்கள். மேலும், இந்த புகைப்படங்களை கொடுத்ததே நடிகை த்ரிஷா தான் என்றும் சுசித்ரா பரபரப்பை கிளப்பியுள்ளார்.
Read More : ’நீங்களே எதையாச்சும் வெச்சுட்டு போயிட்டா என்ன ஆகுறது’..!! போலீசாரை கதிகலங்க வைத்த ஃபெலிக்ஸ் மனைவி..!!