fbpx

10-ம் வகுப்பு மாணவர்களுக்கு இன்று முதல்… ஆன்லைன் மூலம் மட்டுமே….! அரசு தேர்வுத்துறை முக்கிய அறிவிப்பு…!

10-ம் வகுப்பு மாணவர்களுக்கு ஆகஸ்ட் மாதம் நடைபெறும் துணைத்தேர்வுக்கான ஹால்டிக்கெட்களை இன்று முதல் பதிவிறக்கம் செய்துகொள்ளலாம்.

10-ம் வகுப்பு மாணவர்களுக்கு அடுத்த மாதம் நடைபெற உள்ள துணைத்தேர்வு எழுத விண்ணப்பித்த தனித்தேர்வர்கள் தங்களது தேர்வுக் கூட நுழைவுச்சீட்டுகளை இன்று மதியம் முதல் www.dge.tn.gov.in என்ற இணையதளத்தில் விண்ணப்ப எண் அல்லது நிரந்தரப்பதிவெண் மற்றும் பிறந்த தேதியினைப்பதிவு செய்து, அவர்களுடைய தேர்வுக்கூட நுழைவுச்சீட்டைப் பதிவிறக்கம் செய்துகொள்ளலாம். அறிவியியல் பாட செய்முறைத்தேர்விற்கு விண்ணப்பித்துள்ள தனித்தேர்வர்கள் அந்தந்த மாவட்டக்கல்வி அலுவலர்களால் 26-ம் தேதி முதல் 28-ம் தேதி வரையில் நடத்தப்படும் 10-ம் வகுப்பு செய்முறைத்தேர்வினை எழுத வேண்டும்.

இந்தத் தேர்வர்கள் முன்கூட்டியே செய்முறைத்தேர்வு நடத்தப்பட உள்ள பள்ளிகளின் விவரங்களை சம்பந்தப்பட்ட மாவட்டக்கல்வி அலுவர்களை நேரில் அணுகி பெற்றுக்கொள்ள வேண்டும். உரிய தேர்வுக்கூட நுழைவுச்சீட்டின்றி எந்த ஒரு தேர்வரும் தேர்வெழுத அனுமதிக்கப்படமாட்டார்.10-ம் வகுப்பு துணைத்தேர்விற்கான தேர்வுகால அட்டவணையினை www.dge.tn.gov.in என்ற இணையதளத்திற்குச் சென்று பதிவிறக்கம் செய்து கொள்ளலாம் என அரசு தேர்வுத்துறை தெரிவித்துள்ளது.

Also Read: அதிகரிக்கும் கொரோனா… இந்த 9 மாநில அரசு மட்டும் Influenza போன்ற நோய் குறித்து உடனே அறிக்கை அனுப்ப உத்தரவு…!

Vignesh

Next Post

#Tn_Govt_Job:ஆசிரியர்களே கவனம்... மொத்தம் 13,331 காலிப்பணியிடங்கள்...! தற்காலிக பணி நியமனம் குறித்து புதிய தகவல்...!

Fri Jul 22 , 2022
தமிழகத்தில் 24 மாவட்டங்களில் தற்காலிகமாக இடைநிலை, பட்டதாரி, முதுகலை பட்டதாரி ஆசிரியர்கள் பணியில் நியமிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் உள்ள அரசு தொடக்க, நடுநிலை, உயர்நிலை மற்றும் மேல்நிலைப்பள்ளிகளில் மொத்தம் காலியாக உள்ள 13,331 காலிப்பணியிடங்களை தற்காலிக அடிப்படையில் நிரப்புவதற்கு பள்ளி கல்வித்துறை சார்பில் அறிவிப்பு வெளியிடப்பட்டது. தொடக்கப்பள்ளிகளில் காலியாக உள்ள 4,989 இடைநிலை ஆசிரியர் பணியிடங்கள் ரூ.7,500 தொகுப்பூதியத்தில் ஜூலை முதல் அடுத்த ஆண்டு ஏப்ரல் வரையிலும்; 5,154 பட்டதாரி […]

You May Like