12-ம் வகுப்பு தேர்வு முடிவுகள் வந்த அன்று மாலை 4 மணிக்குள் தோல்வி அடைந்த மாணவர்களை உடனடியாக மறு தேர்விற்கு தயார் செய்ய வேண்டும்.
இது குறித்து அரசு வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில்; தமிழ்நாடு திறன் மேம்பாட்டுக் கழகத்துடன் இணைந்து கம்ப்யூட்டர் மற்றும் ஆங்கிலப் பயிற்சிகளுக்கு 10, 11 மற்றும் 12-ம் வகுப்பு மாணவர்களை ஒருங்கிணைத்து தவறாமல் பங்கேற்க செய்ய வேண்டும். நுழைவுத் தேர்வுவிவரங்களை கூறுவதும், முதன்மைக்கல்லூரிகளுக்கு மாணவர்களை அழைத்துச் செல்வது மற்றும் திறன்வளர்ப்பு முகாம்களை நடத்த வேண்டும்.
மாணவர்களின் வாட்ஸ் அப் குழுவினை உருவாக்கி, மே 6-ம் தேதி முதல் தினசரி வழங்கப்பட உள்ள பயிற்சிகள், கல்லூரி கனவு குறித்த தகவல்கள் மற்றும் கல்லூரி சேர்க்கை விவரங்களை அனுப்ப வேண்டும். மாணவர்களின் விண்ணப்ப படிவங்களை நிரப்பி, அவர்கள் உயர் கல்வியில் சேர்வதை உறுதி செய்ய வேண்டும்.
மேலும் 12-ம் வகுப்பு தேர்வு முடிவுகள் வந்த அன்று மாலை 4 மணிக்குள் தோல்வி அடைந்த மாணவர்களை அழைத்து பேசி, ஆலோசனை கூறி அவர்களை உடனடியாக மறு தேர்விற்கு தயார் செய்ய வேண்டும். ஒவ்வொரு வட்டாரத்திலும் அமைக்கப்பட்டுள்ள சிறப்பு முகாம்களில் சேர்க்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.