fbpx

NCERT அதிரடி… 12-ம் வகுப்பு மார்க் சீட்டில் 9,10 & 11-ம் வகுப்பு மதிப்பெண்கள்…!

12-ம் வகுப்பு பொது தேர்வு மதிப்பெண்களுடன், ஒன்பது, பத்து மற்றும் 11-ம் வகுப்பு இறுதி தேர்வு மதிப்பெண்களையும் சேர்க்க வேண்டும். மத்திய கல்வி அமைச்சகத்துக்கு தேசிய கல்வி ஆராய்ச்சி மற்றும் பயிற்சிக் கவுன்சில் பரிந்துரை செய்துள்ளது.

தேசிய கல்வி ஆராய்ச்சி மற்றும் பயிற்சி நிறுவனம் (NCERT) 12-ம் வகுப்பு பொதுத் தேர்வுகளுக்கான புதிய மதிப்பீட்டு மாதிரியை முன்மொழிந்துள்ளது. இதில் 9 முதல் 11-ம் வகுப்பு வரையிலான மதிப்பெண்களை 12-ம் வகுப்பு இறுதி முடிவுகளுடன் இணைக்க பரிந்துரைத்துள்ளது. மேலும், இதில் தொழில் மற்றும் திறன் அடிப்படையிலான பயிற்சிக்கு அதிக முக்கியத்துவம் கொடுக்கப்பட்டுள்ளது. 9 ஆம் வகுப்பு இறுதி மதிப்பெண்ணில் 15 சதவிகிதம், 10-ம் வகுப்பிலிருந்து 20 சதவிகிதம், 11-ம் வகுப்பிலிருந்து 25 சதவிகிதம் மற்றும் மீதமுள்ள 40 சதவிகிதம் 12-ம் வகுப்பிலிருந்தும் கணக்கிடப்படும்.

NCERT-இன் முன்மொழிவின்படி, 9 ஆம் வகுப்பு முதல் ஒரு மாணவரின் செயல்திறன் அவர்களின் 12 ஆம் வகுப்பு தேர்வு முடிவுகளில் காரணியாக இருக்கும். ஜூலை 2024 இல் கல்வி அமைச்சகத்திடம் NCERT அமைத்த ஒழுங்குமுறை மையமான ‘பரக்’ சமர்ப்பித்த அறிக்கை, இந்தியாவில் உள்ள அனைத்து கல்வி வாரியங்களிலும் தரப்படுத்தப்பட்ட மதிப்பீட்டு பரிந்துரை செய்யப்பட்டுள்ளது.

English Summary

Class 9,10 & 11 Marks in Class 12 Mark Sheet

Vignesh

Next Post

பெண்களே அரிய வாய்ப்பு!. டாடா குழுமத்தில் வேலை!. தமிழகம், கர்நாடகாவில் 4000 பணியிடங்கள்!. மிஸ் பண்ணிடாதீங்க!

Tue Aug 27 , 2024
Tata Group to hire 4,000 female technicians from this state to appoint at plants in Tamil Nadu & Karnataka; details here

You May Like