fbpx

இமாச்சலில் மேகவெடிப்பு… தேசிய நெடுஞ்சாலையில் உள்ள பாலம் நிலச்சரிவில் இடிந்து விழுந்த விடியோ காட்சி வைரல்..!

இமாச்சலப் பிரதேச மாநிலத்தில் இப்பொழுது கனமழை பொய்து வருகிறது. மேலும், அங்கு திடீரென மேகவெடிப்பு ஏற்பட்டு கனமழை பெய்து வருவதால் வெள்ள பாதிப்பும், ஆங்காங்கே நிலச்சரிவும் ஏற்பட்டுள்ளது. இந்நிலையில் அந்த மாநிலத்தில் இதுவரை மழை வெள்ள பாதிப்பினால் எட்டு பேர் உயிரிழந்துள்ளனர். மேலும் குல்லு பகுதியில் நிலச்சரிவு ஏற்பட்டதில் சிக்கி 55 வயது பெண் சாவேலு தேவி, 17 வயது மாணவி கிருத்திகா ஆகியோர் உயிரிழந்துள்ளனர்.

அந்த மாவட்டத்தில் மற்றொரு பகுதியில் ஏற்பட்ட மேகவெடிப்பில் பத்து கடைகள், மூன்று கார்கள் என வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்டன. கனமழையால் சிக்கித் தவித்து வரும் இமாச்சலில் என்எஃச் 5 தேசிய நெடுஞ்சாலையில் சிம்லா-கால்கா என்னும் மேம்பாலம் உள்ளது. ஐந்து இணைப்புகளை கொண்ட இந்த மேம்பாலத்தின் பெரிய பகுதி ஒன்று மழை பாதிப்பால் இடிந்து விழுந்துள்ளது. சுமார் 50 மீட்டர் அளவில் பாலம் முற்றிலும் இடிந்துள்ளது.

இதில் உயிர் சேதமும் எதுவும் ஏற்படவில்லை. இரண்டு வாகனங்கள் மட்டும் சேதமடைந்தன. பாலம் இடிந்து விழும் வீடியோ கட்சி தற்போது சமூக வலைத்தளங்களில் வேகமாக பரவி வருகிறது. இந்த சேதம் காரணமாக நெடுஞ்சாலை முடக்கப்பட்டுள்ளது. எனவே, போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளது.

Rupa

Next Post

கல்லூரி வாசலில் மாணவருக்கு நேர்ந்த கொடூரம்.. முன்விரோதம் காரணமா..?

Sat Aug 13 , 2022
கர்நாடக மாநிலத்தில் உள்ள பெங்களூர் கேஜி ஹள்ளி பகுதியில் உள்ளவர் அர்பாஸ். 17 வயதான அந்த சிறுவன் அந்த இருக்கும் பகுதியில் இருக்கும் தனியார் கல்லூரியில் பியூசி இரண்டாம் வருடம் படித்து வந்தார். இந்நிலையில் நேற்று மதியம் கல்லூரியில் இருந்த அர்பாஸுக்கு செல்போன் அழைப்பு வந்துள்ளது. இதை தொடர்ந்து அவர் கல்லூரியில் இருந்து வெளியே சென்றுள்ளார். அப்போது கல்லூரி அருகில் வைத்து அப்பாஸை மர்ம நபர்கள் சரமாரியாக கத்தியால் குத்தி […]
பைக்கில் சென்ற இளைஞரை சரமாரியாக வெட்டி தலையை மட்டும் எடுத்துச் சென்ற மர்ம கும்பல்..!! அதிரவைக்கும் சம்பவம்..!!

You May Like