தொப்பையில் இருக்கும் கொழுப்பை கரைக்கவும் அடி வயிற்றில் இருக்கும் ஊளை சதையை கரைக்கவும் இயற்கையான இந்த டீயை குடித்தாலே போதும்.
இன்றைய காலக்கட்டத்து ஆண்கள் மற்றும் பெண்களின் முக்கிய பிரச்சனையே பிசிஓடி, தொப்பை, ஃபேட்டி லிவர் உள்ளிட்டவைதான். அதிலும் வயிற்று தொப்பையை குறைக்க ஆண்களும், பெண்களும் தலை கீழ நின்று தண்ணீர் குடித்தாலும் அது குறைவதும் இல்லை. நம்மால் தொடர்ந்து கடினமாக பின்பற்றவும் முடிவதில்லை. வயிற்றையும், வாயையும் கட்டவே முடியவில்லை. இதனால் தொப்பை தொங்கி கொண்டே போகிறது. இதனால் ஆண்களுக்கு இரனியா, விரை இறங்குதல், ஃபேட்டி லிவர் உள்ளிட்ட பிரச்சனைகள் உண்டாகிறது.
அதேபோல், பெண்களுக்கும் பிசிஓடி எனப்படும் கருமுட்டையில் நீர் கட்டிகள் இருப்பது, ஃபேட்டி லிவர், மாதவிடாய் பிரச்சனை, குழந்தையின்மை உள்ளிட்டவை ஏற்படுகிறது. இதனால் மருத்துவர்கள் உடல் எடையை குறைக்க வேண்டும் என அறிவுறுத்துகின்றனர். இதில் சிலர் வாக்கிங், உடற்பயிற்சி, யோகா, உணவுக் கட்டுப்பாட்டை செய்து குறைக்கின்றனர். ஆனால் பலரோ இரு நாட்கள் வாக்கிங் போவது பிறகு சனி, ஞாயிறுகளில் லீவு விட்டுவிடுவது, பண்டிகை நாட்களில் போவதே கிடையாது.
இன்னும் சிலர் உணவை கட்டுப்படுத்த முடியாது என்பதால் எதை தின்றால் பித்தம் தெளியும் என்பதை போல் எதை சாப்பிட்டால் எளிதாக தொப்பை குறையும் என யோசிக்கவும் ஆராயவும் தொடங்கிவிட்டனர். இதனால் பலர் கொழுப்புகளை நீக்கும் அறுவை சிகிச்சைகளை மேற்கொள்கின்றனர். தேவையில்லாத மருந்து மாத்திரைகளை மருத்துவரின் அனுமதியின்றி உட்கொள்கின்றனர். காலை உணவை தவிர்க்கின்றனர். காலை உணவுக்கு பதில் ஏதாவது புரத பவுடரை உட்கொள்கின்றனர். இது ஆபத்தை விளைவிக்கிறது.
இதனால் இயற்கையான முறையில் தொப்பையையும், ஃபேட்டி லிவரையும் எப்படி குறைப்பது என்பது குறித்து மருத்துவர் ஒருவர் கூறியுள்ளார். அதாவது, கிராம்பு டீ குடித்தால் நிச்சயம் பலன் கிடைக்கும் என்கிறார். இந்த கிராம்பு டீ எப்படி செய்வது என்பது குறித்த செயல்முறை விளக்கத்தையும் கொடுத்துள்ளார். அதாவது, கிராம்பு 20 கிராம், சீரகம் 40 கிராம், மிளகு 5 கிராம், சுக்கு சின்ன துண்டு, தனியா 20 கிராம் ஆகியவற்றை லேசாக வாணலியில் போட்டு வறுத்து ஆற வைத்துக் கொள்ள வேண்டும். பிறகு அவற்றை எடுத்து ஒன்றும் பாதியாக அரைத்து வைத்துக் கொண்டு தினமும் வெறும் வயிற்றில் காய்ச்சி வடிகட்டி குடித்து வர வேண்டும். இப்படி செய்து வந்தால் தொப்பையே இருக்காது.