fbpx

நாளை பீகார் புறப்படுகிறார்…..! முதலமைச்சர் ஸ்டாலின் எதற்காக தெரியுமா…..?

அடுத்த ஆண்டு நாடாளுமன்ற பொது தேர்தல் நடைபெற உள்ள நிலையில், மறுபடியும் பாஜக ஆட்சியை கைப்பற்ற தீவிர முனைப்பு காட்டி வருகிறது. அதேசமயம் பாஜகவை எதிர்ப்பதற்கு ஒரு வலுவான எதிரணியை ஏற்படுத்தும் நோக்கத்தை எதிர்க்கட்சிகள் தீவிரமாக முயற்சி செய்தவர் இதனால் நாளை மறுநாள் பாட்னாவில் எதிர்க்கட்சிகளின் கூட்டம் நடைபெற உள்ளது.

கடந்த 12ஆம் தேதி பாட்னாவில் நடக்க இருந்த எதிர்க்கட்சிகளின் கூட்டம் ஒடிசாவில் நடைபெற்ற ரயில் விபத்து காரணமாக 23ஆம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டது. அதன்படி எதிர்வரும் ஆண்டு நாடாளுமன்ற தேர்தலுக்கு முன்னதாக பாஜகவிற்கு எதிராக எதிர்க்கட்சிகள் ஒன்றாக கைகோர்ப்பதற்காகவே இந்த கூட்டத்தை கூட்டி இருப்பதாக சொல்லப்படுகிறது. இந்த நிலையில் தான் நாளை மறுநாள் நடைபெற உள்ள எதிர்க்கட்சி தலைவர்கள் கூட்டத்தில் பங்கேற்பதற்காக நாளை பிஹார் செல்கிறார் முதலமைச்சர் ஸ்டாலின்.

இந்தக் கூட்டத்தில் காங்கிரஸ் கட்சியின் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே, ராகுல் காந்தி, மேற்குவங்க முதலமைச்சர் மம்தா பானர்ஜி, அகிலேஷ் யாதவ், ஜார்கண்ட் முதலமைச்சர் ஹேமந்த் சோரன், உத்தவ் தாக்கரே, தேசியவாத காங்கிரஸ் கட்சியின் தலைவர் சரத்பவார், டெல்லி முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால், சிபிஐ பொதுச் செயலாளர் டி ராஜா, சீதாராம்யெச்சூரி உள்ளிட்டோர் பங்கேற்க உள்ளனர்.

Next Post

’இதுவே எனது கடைசி செய்தியாளர் சந்திப்பாக கூட இருக்கலாம்’..!! பரபரப்பை கிளப்பிய ராமர்பிள்ளை..!! யாருன்னு தெரியுதா..?

Wed Jun 21 , 2023
இந்தியாவில் ஓராண்டுக்கு மேலாக பெட்ரோல், டீசல் விலை லிட்டருக்கு 100 ரூபாயை தாண்டி வரலாறு காணாத அளவுக்கு விற்பனையாகி வருகிறது. சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை குறைந்தபோதும் இந்தியாவில் பெட்ரோல், டீசல் விலையை மத்திய அரசு குறைக்கவில்லை. இதனால் வாகன ஓட்டிகள் பெரும் இன்னல்களை சந்தித்து வருகின்றனர். விரைவில் நாடாளுமன்ற தேர்தல் வரவுள்ளதால் பெட்ரோல், டீசல் விலை குறைப்பு நடவடிக்கை இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ஆனால், பெட்ரோல், டீசலுக்கு […]

You May Like