fbpx

2023-24-ம் நிதியாண்டு டிசம்பர் 25 வரை நிலக்கரி உற்பத்தி 664.37 மில்லியன் டன்னை எட்டியது…!

நிலக்கரி அமைச்சகத்தின் சமீபத்திய புள்ளி விவரங்களின்படி 2023 ஏப்ரல் முதல் டிசம்பர் 25 வரை 2023-24 –ம் நிதியாண்டில் நிலக்கரி உற்பத்தி ஒட்டுமொத்த சாதனையாக 664.37 மில்லியன் டன்னை எட்டியுள்ளது. இது கடந்த ஆண்டின் இதே காலத்துடன் ஒப்பிடும்போது 12.29% வளர்ச்சியைக் காட்டுகிறது.நிலக்கரி ஏற்றுமதியைப் பொறுத்தவரை, 2023 ஏப்ரல் முதல் டிசம்பர் 25 வரை 2023-24-ம் நிதியாண்டில் ஒட்டுமொத்த சாதனை 692.84 மில்லியன் டன்னாக இருந்தது.

இது முந்தைய ஆண்டின் இதே காலத்துடன் ஒப்பிடும்போது 11.32% வளர்ச்சியைக் குறிக்கிறது. இந்த அதிகரிப்பு மின் துறையின் எரிசக்தி தேவைகளைப் பூர்த்தி செய்ய நீடித்த, வலுவான நிலக்கரி விநியோகத்தை உறுதி செய்கிறது.மேலும், 2023 ஏப்ரல் முதல் டிசம்பர் 25 வரை மின் துறைக்கு ஒட்டுமொத்த நிலக்கரி விநியோகம் 8.39% அதிகரித்து, முந்தைய ஆண்டின் இதே காலகட்டத்தில் 532.43 மில்லியன் டன்னுடன் ஒப்பிடும்போது 577.11 மில்லியன் டன்னை எட்டியது.

2023 டிசம்பர் 25 நிலவரப்படி, சுரங்கங்கள், அனல் மின் நிலையங்கள், போக்குவரத்து உள்ளிட்ட துறைகளில் ஒட்டுமொத்த நிலக்கரி கையிருப்பு நிலை 91.05 மில்லியன் டன்னை எட்டியது.

Vignesh

Next Post

நெல்லை மாவட்டத்திற்கான அரையாண்டு தேர்வுகள் நடைபெறும் தேதி அறிவிப்பு…!

Sat Dec 30 , 2023
நெல்லையில் வெல்ல பாதிப்பால் ஒத்திவைக்கப்பட்டிருந்த அரையாண்டு தேர்வுகள் தேதி தற்போது அறிவிக்கப்பட்டுள்ளது. கடந்த சில நாட்களுக்கு முன்பு நெல்லை, தூத்துக்குடி உள்ளிட்ட மாவட்டங்களில் ஒரே நாளில் வரலாறு காணாத பேய் மழை கொட்டி தீர்த்தது. இதனால் ஊரே வெள்ளக்காடாக மாறியது. தாமிரபரணி ஆறு பல்வேறு கிராமங்களிலும் நகரங்களிலும் புகுந்து 4 அடிக்கு மேல் தண்ணீர் தேங்கும் நிலை உள்ளது. இதனால் பலர் வீடுகளையும் உடைமைகளையும் இழந்து பாதிப்புக்குள்ளாகினர். இந்த கனமழை […]

You May Like