பெரும்பாலான மக்கள் காலை எழுந்த உடன் காபி உடன் தான் தங்கள் நாளை தொடங்குகின்றனர். அதிக அளவு காபி குடிப்பது உடலுக்கு தீங்கை ஏற்படுத்தும் என்றாலும், மிதமான அளவில் காபி குடிப்பது பல நன்மைகளை வழங்குகிறது. அந்த வகையில் காபி குடிப்பதால் இறப்பு ஆபத்து குறையும் என்று சொன்னால் நம்பமுடிகிறதா? உண்மை தான். சமீபத்திய ஆய்வு இதை உறுதி செய்துள்ளது.
துலேன் பல்கலைக்கழக பொது சுகாதாரப் பள்ளியின் டாக்டர் லு குய் தலைமையிலான சமீபத்திய ஆய்வின்படி, நாம் காபி குடிக்கும் நேரம் ஒரு நாளில் நாம் உட்கொள்ளும் காபியின் அளவைப் போலவே நமது ஆரோக்கியத்திற்கும் சமமாக முக்கியமானது என்பது தெரியவந்துள்ளது.
முந்தைய ஆய்வுகள் காபி நுகர்வு நேர்மறையான விளைவுகளை டைப் 2 நீரிழிவு மாரடைப்பு மற்றும் பக்கவாதம் போன்ற பல நாள்பட்ட நிலைமைகளின் அபாயத்தைக் குறைப்பதாக தெரிவித்த நிலையில் இந்த புதிய ஆய்வு முடிவுகள் முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது.
ஆய்வின் கண்டுபிடிப்புகள்
இந்த ஆய்வு 40000 பேரிடம் நடத்தப்பட்டது, மேலும் பங்கேற்பாளர்களில் 36 சதவீதம் பேர் காலை 4 மணி முதல் நண்பகல் வரை காபி குடிப்பவர்கள் என்பது கண்டறியப்பட்டது. இரண்டாவது குழுவில் 14 சதவீதம் பேர் இருந்தனர், அவர்கள் நாள் முழுவதும் காபி குடிப்பவர்கள், அவர்கள் விரும்பும் போதெல்லாம் காபி உட்கொண்டனர். மீதமுள்ள பங்கேற்பாளர்கள் காபி குடிக்காதவர்கள்.
பங்கேற்பாளர்களை 9.8 ஆண்டுகளாக கண்காணித்து, காபி குடிக்காதவர்களுடன் ஒப்பிடும்போது, காலையில் குடிப்பவர்களுக்கு அனைத்து காரணங்களாலும் இறக்கும் ஆபாயம் 16 சதவீதம் குறைவாகவும், இதய நோயால் இறக்கும் அபாயத்தை 31 சதவீதம் குறைவாகவும் இருந்தது கண்டறியப்பட்டது. மாறாக, பகலில் எந்த நேரத்திலும் காபி அருந்தியவர்கள் இறப்பு விகிதத்தில் எந்தக் குறைவையும் காட்டவில்லை.
துலேன் பல்கலைக்கழக பொது சுகாதாரப் பள்ளியின் பேராசிரியர் மற்றும் HCA ரீஜண்ட்ஸ் சிறப்புத் தலைவரான டாக்டர் லு குய் ஒரு அறிக்கையில், “இதுவரையிலான ஆராய்ச்சிகள் காபி குடிப்பது இதய நோய் அபாயத்தை அதிகரிக்காது என்றும், சில நாள்பட்ட நோய்களின் அபாயத்தைக் குறைப்பதாகவும் தெரிகிறது என்றும் கூறுகின்றன. காஃபின் நம் உடலில் ஏற்படுத்தும் விளைவுகளைக் கருத்தில் கொண்டு, நீங்கள் காபி குடிக்கும் நாளின் நேரம் இதய ஆரோக்கியத்தில் ஏதேனும் தாக்கத்தை ஏற்படுத்துமா என்று பார்க்க விரும்பினோம்.” என்று தெரிவித்தார்.
காலை காபி ஏன் ஆரோக்கியமானது?
மாலையில் காபி குடிப்பது உடலின் இயற்கையான சர்க்காடியன் தாளத்தை சீர்குலைக்கும் என்று ஆராய்ச்சியாளர்கள் சுட்டிக்காட்டினர். ஆனால் அதே நேரம் காலை நேரத்தில் காபி குடிப்பது நல்லது என்றும் ஆய்வாளர்கள் கூறியுள்ளனர். காலையில், உடல் அதிக வீக்கக் குறிப்பான்களை உருவாக்குகிறது என்றும், காபியில் உள்ள அழற்சி எதிர்ப்பு பண்புகள் அதை நிர்வகிக்க உதவும் என்றும் நிபுணர்கள் தெரிவிக்கின்றனர்.
Read More : மூளையை உண்ணும் அரிய வகை அமீபா நோய் அலர்ட்.. இந்தியா அடுத்த ஹாட் ஸ்பாட்டா..? யாருக்கு அதிக ஆபத்து..?