fbpx

பிப் 17-ம் தேதி கடைசி நாள்…! போட்டி தேர்வுக்கு அரசு சார்பில் இன்று முதல் இலவச பயிற்சி வகுப்பு…! முழு விவரம் இதோ…

மத்திய அரசுப் பணி தேர்வுக்கு இன்று முதல் இலவச பயிற்சி அளிக்கப்படவுள்ளது என கோவை மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார்.

இது தொடா்பாக அவா் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில்; மத்திய அரசுப் பணியாளா் தேர்வாணையம் சாா்பில் 2022 காலிப் பணியிடங்களுக்கான தேர்வு அறிவிக்கப்பட்டுள்ளது. இதற்கு பத்தாம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். இத்தேர்வுக்கு விண்ணப்பிக்க பிப்ரவரி 17-ம் தேதிக்குள் https://ssc.nic.in/ என்ற இணையதளம் மூலம் விண்ணப்பிக்க வேண்டும்.

2023-ம் ஆண்டு ஜனவரி 1 ஆம் தேதி அன்று எஸ்.சி., எஸ்.டி. பிரிவினா் 30 வயதுக்குள்ளும், இதர பிற்படுத்தப்பட்ட வகுப்பினா் 28 வயதிற்குளும் இருக்க வேண்டும். முன்னாள் ராணுவத்தினா், மாற்றுத்திறனாளிகளுக்கு நடைமுறை விதிகளின்படி வயது வரம்பில் சலுகை வழங்கப்பட்டுள்ளது. எஸ்.சி., எஸ்.டி., பிரிவினா், மாற்றுத்திறனாளிகளுக்கு கட்டண விலக்கு அளிக்கப்பட்டுள்ளது. மற்றவா்கள் ரூ.100 கட்டணம் செலுத்த வேண்டும்.

இத்தேர்வினை தமிழ் மொழியில் எழுத அனுமதி வழங்கப்பட்டுள்ளது. கோவை மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகம் மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையம் சாா்பில் மத்திய அரசுப் பணி தேர்வுக்கு இலவச பயிற்சி அளிக்கப்படவுள்ளது. இன்று முதல் பயிற்சி வகுப்புகள் தொடங்க உள்ளது. மத்திய அரசுப் பணி தேர்வுக்கு விண்ணப்பித்துள்ள இளைஞா்கள் இலவச பயிற்சி வகுப்பை பயன்படுத்திகொள்ள வேண்டும் என தெரிவித்துள்ளார்.

Vignesh

Next Post

இந்த ஊரில் ஒவ்வொரு வீட்டிலும் ஒரு விமானம் உள்ளது... எல்லா இடங்களுக்கும் விமானத்தில் தான் செல்வார்களாம்..

Sun Feb 12 , 2023
தற்போது அனைவரின் வீடுகளிலும் கார் அல்லது பைக் உள்ளது. ஒரு வீட்டில் எத்தனை கார், எத்தனை பைக் உள்ளது என்பது அந்தந்த வீடுகளின பொருளாதார நிலைமையை பொறுத்தது.. பொதுவாக பலரும் வெளியே சென்றாலோ அல்லது அலுவலகத்திற்கு சென்றாலோ கார் அல்லது பைக்கை எடுத்துக்கொண்டு செல்கின்றனர்.. ஆனால் ஒரு ஊரில் அனைவரின் வீடுகளிலும் விமானம் இருக்கிறது என்று சொன்னால் உங்களால் நம்ப முடிகிறதா..? ஆனால் அது உண்மை தான்.. அங்கு அலுவலகம் […]

You May Like