கோயமுத்தூரில் கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் நடந்த கார் குண்டுவெடிப்பு சம்பவத்தை தொடர்ந்து, ஐ.எஸ் பயங்கரவாத அமைப்பின் ஆதரவு என்ன ஓட்டத்தில் இருப்பவர்கள் உள்ளே காவல்துறையினர் அடையாளம் கண்டு அவர்களின் நடவடிக்கைகளை ரகசியமாக கண்காணித்து வருகின்றனர். whatsapp உள்ளிட்ட சமூக வலைதளங்களில் பதற்றத்தை உண்டாக்கும் விதத்திலும், சட்டம் ஒழுங்கு சீர்குலையும் விதத்திலும் கருத்துக்களை பதிவிடுபவர்களை கண்காணித்து அவர்கள் மீது காவல்துறையினர் நடவடிக்கை மேற்கொண்டு வருகின்றனர்.
இத்தனை நிலையில் கரும்புக்கடை சபா கார்டனை சேர்ந்த அப்துல் காதர்(27) பரத் நகரைச் சேர்ந்த சுலைமான்(28) உள்ளிட்டோர் சர்ச்சைக்குரிய கருத்துக்களை பதிவிட்டது தெரிய வந்தது. இதனை தொடர்ந்து இருவரின் வீடுகளிலும் கரும்பு கடை காவல்துறையினர் நேற்று அதிகாலை 6:00 மணி அளவில் திடீரென்று சோதனை மேற்பட்டனர் வீட்டில் இருந்து, கைபேசிகள், மடிக்கணினிகள் புத்தகங்கள் உள்ளிட்டவற்றை அவர்கள் கைப்பற்றியுள்ளனர்.
மாநகர காவல் துறை ஆணையர் பாலகிருஷ்ணன் தெரிவித்ததாவது, சட்டம் ஒழுங்குக்கு பாதிப்பு ஏற்படுத்தும் இடத்தில் சர்ச்சைக்குரிய கருத்துக்களை. பதிவித்த இருவரின் வீடுகளிலும் சோதனை மேற்கொள்ளப்பட்டது. அவர்களிடம் விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. அதன் இறுதியில் தான் அடுத்த கட்ட நிலவரம் தெரியவரும். கோவையில் பயங்கரவாத எண்ண ஓட்டம் உள்ள நபர்கள் ஒன்று கூடி இருப்பதாக உளவுத்துறையினர் வாயிலாக எச்சரிக்கை விடுக்கப்பட்டு இருப்பதாக தெரிவிக்கப்படுவது தவறான தகவல் என்று கூறியுள்ளார்.