fbpx

700 கோடி செலவில் கோவை ரயில் நிலையம்.. அடுக்குமாடி கட்டிடமாக மாற்றப்பட இருக்கிறது..!

கோவை ரயில் நிலையமானது 1873-ம் ஆண்டு பிப்ரவரி மாதம் 1-ந் தேதி திறக்கப்பட்டது. கடந்த ஆண்டு மட்டும் 1 கோடி பேர் கோவை ரயில் நிலையத்தை பயன்படுத்தி உள்ளனர். அதிக வருவாய் ஈட்டும் ரயில் நிலையங்களில் கோவை ரயில் நிலையம் 3-வது இடத்தில் உள்ளதாக கூறப்படுகிறது.

இந்நிலையில் தெற்கு ரயில்வே சார்பில் 700 கோடி ரூபாய் செலவில் கோவை ரயில் நிலையத்தை மேம்படுத்த திட்டமிட்டு இருப்பதாக கூறப்படுகிறது. இது தொடர்பாக தெற்கு ரயில்வே அதிகாரிகள் கோவை மாவட்ட ஆட்சியர் மற்றும் மாநகராட்சி ஆனையருடன் வீடியோ கான்பரன்சிங் மூலம் தொடர்பு கொண்டு பேசியுள்ளனர்.

நிலம் கையகப்படுத்தும் திட்டம் தற்போதைக்கு இல்லை. அதே இடத்தில் பிரம்மாண்டமாக கட்ட திட்டமிட்டுள்ளோம். பல்வேறு அடுக்குமாடிகளுடன் இந்த கட்டிடம் கட்ட திட்டமிடப்பட்டுள்ளது. அதில் ஷாப்பிங் காம்ப்ளக்ஸ் மற்றும் நவீன வசதிகள் இருக்கும். புதிதாக கட்டப்படும் கட்டிடம் முழுவதும் ஏசி பொருத்தப்பட்டிருக்கும், மேலும் அதிநவீனமான லக்கேஜ் சோதனை செய்யும் கருவிகள் இடம்பெறும்.

தற்போது இருக்கும் ஸ்டேட் பேங்க் ரோடு அருகே அதிகளவிலான போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு வருகிறது. போக்குவரத்து போலீசாரால் கூட மக்களை சமாளிக்க முடியாத அளவிற்கு கூட்டம் அலைமோதுகிறது. எனவே புதிய திட்டத்தில் குறிப்பிட்ட இடங்களுக்கு பேருந்து வசதிகள் செய்து தருமாறு வடிவமைக்கப்பட்டுள்ளது. மேலும் எதிரே இருக்கும் கோவை மருத்துவ கல்லூரிக்கு செல்லும் வகையில் எஸ்கலேட்டர் ஒன்றும் அமைக்கப்படும். இவ்வாறு அவர் கூறினார்.

Maha

Next Post

’விசாரணை நடத்தவிடாமல் செந்தில் பாலாஜி அனைத்து வகைகளிலும் தடுத்தார்’..!! அமலாக்கத்துறை பரபரப்பு வாதம்..!!

Wed Aug 2 , 2023
குற்றம்சாட்டப்பட்டவரை காவலில் விசாரிப்பது அமலாக்கத்துறைக்கு இருக்கும் உரிமை; அதை யாராலும் மறுக்க முடியாது என அமலாக்கத்துறை தெரிவித்துள்ளது. அமைச்சர் செந்தில் பாலாஜி கைது விவகாரத்தில் தாக்கல் செய்யப்பட்டுள்ள மேல்முறையீடு வழக்கு விசாரணை உச்சநீதிமன்றத்தில் நடைபெற்று வருகிறது. அமலாக்கத்துறை சார்பில் சொலிசிட்டர் ஜெனரல் துஷார் மேத்தா வாதம் செய்தார். அமைச்சர் செந்தில் பாலாஜி விசாரணைக்கு ஒத்துழைக்காததன் காரணமாகவே கைது செய்யப்பட்டார். அவர் கைது செய்யப்பட்டாலும் அமலாக்கத்துறை காவலில் இல்லை. விசாரணை நடத்தவிடாமல் […]

You May Like