கோவை ஆர் எஸ் புரம் பகுதியில் தனியார் பள்ளி ஒன்றின் படித்து வந்த மாணவி ஒருவர் கடந்த 2021 ஆம் ஆண்டு தற்கொலை செய்து கொண்டார். அதே பள்ளியில் இயற்பியல் ஆசிரியராக பணியாற்றி வந்த மிகவும் சக்கரவர்த்தி என்பவர் வழங்கிய பாலியல் துன்புறுத்தலின் காரணமாக மாணவி கடிதம் எழுதி வைத்துவிட்டு தற்கொலை செய்து கொண்டார். அந்த கடிதத்தில் ஆசிரியர் மிதுன் சக்கரவர்த்தி தவிர தனக்கு பாலியல் தொந்தரவு வழங்கிய நபர்களின் பெயர்களையும் குறிப்பிட்டு இருந்தார்.
இத்தகைய நிலையில், அனைத்து மகளிர் காவல் துறையினர் ஆசிரியர் மிதுன் சக்கரவர்த்தி மற்றும் பள்ளியின் தலைமை ஆசிரியர் மீரா ஜாக்சன் உள்ளிட்டோரை கைது செய்தனர் அதோடு மாணவியின் வீட்டின் அருகில் வசித்து வந்த மனோஜ் ராஜ் மற்றும் முகமது சுல்தான் உள்ளிட்டோரை கைது செய்திருக்கிறார்கள்.
இந்த வழக்கு கோவை நீதிமன்றத்தில் கடந்த 2 ஆண்டுகளாக நடைபெற்று வந்தது. இந்த நிலையில் அரசு தரப்பில் மேலும் சிலரை கைது செய்யப்பட வேண்டிய சூழ்நிலை இருப்பதால், கடந்த மாதம் நீதிமன்றத்திடம் அனுமதி வாங்கி இந்த வழக்கு தொடர்பாக விசாரணை நடத்தி வந்த அனைத்து மகளிர் காவல் துறையினர் ஆசிரியர் மிதுன் சக்கரவர்த்தியின் மனைவி அர்ச்சனாவை கைது செய்துள்ளனர்.
தற்கொலை செய்து கொண்ட மாணவியின் செல் போன் காவல்துறையினரால் பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்ட நிலையில், அதில் டெலிட் ஆன ஆடியோ அனைத்தும் தொழில்நுட்ப குழுவினரால் மீட்டெடுக்கப்பட்டது.
பள்ளி மாணவி பாலியல் துன்புறுத்தல் செய்யப்பட்டது தெரிந்தும் காவல்துறையிடம் புகார் வழங்காததால் அர்ச்சனாவையும் போக்சோ சட்டத்தில் கைது செய்த அனைத்து மகளிர் காவல் நிலைய காவல்துறையினர் அவரை நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தி கோவை மத்திய சிறையில் அடைத்தனர்.