நான் முதல்வன் – 2023-24ஆம் ஆண்டிற்கான கல்லூரி கனவுப் புத்தகம் வழங்குதல் தொடர்பாக அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.
12-ம் வகுப்பு மாணவர்களுக்கான உயர்கல்வி மற்றும் வேலை வாய்ப்புக்கான வழிகாட்டல் நிகழ்ச்சி முதலமைச்சர் அவர்களால் 25.06.2022 அன்று ‘ கல்லூரிக் கனவு ‘ என்னும் பெயரில் தொடங்கி வைக்கப்பட்டது. அதன் அடிப்படையில் , 2023-2024 கல்வி ஆண்டிற்கான உயர்கல்வி மற்றும் வேலை வாய்ப்புக்கான வழிகாட்டல் நிகழ்ச்சி தொடங்கப்பட்டுள்ளது.
அதன் படி, கீழ் கண்டவாறு அனைத்துப் பகுதிகளிலும் பங்கேற்கும் ஒவ்வொரு மாணவர்களுக்கும் , இந்நூல் தமிழ்நாடு பாடநூல் மற்றும் கல்வியியல் பணிகள் கழகத்தால் அச்சிடப்பட்டு தமிழ்நாடு திறன் மேம்பாட்டுக் கழகத்தால் வழங்கப்பட உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.