சென்னை மேற்கு மாம்பலத்தில் உள்ள சாலை ஒன்றில், கல்லூரி மாணவி ஒருவர் தனியாக நடந்து சென்றுள்ளார். அப்போது அந்த வழியாக மர்ம நபர் ஒருவர் பைக்கில் சென்றுள்ளார். அப்போது அந்த மாணவி மீது அந்த வாலிபருக்கு ஆசை ஏற்படவே, அவர் பொது வெளி என்று கூட யோசிக்காமல் அந்த மாணவிக்கு பாலியல் தொல்லை கொடுத்து விட்டு அங்கிருந்து தப்பி சென்றுள்ளார். இதனால் அதிர்ச்சி அடைந்த மாணவி, தனது வீட்டிற்க்கு சென்று தனக்கு நடந்த சம்பவத்தை குறித்து தனது தந்தையிடம் கூறி அழுதுள்ளார்.
இதனால் அதிர்ச்சி அடைந்த மாணவியின் தந்தை, சம்பவம் குறித்து காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். புகாரின் பேரில் வழக்கு பதிவு செய்த காவல்துறையினர், குற்றவாளியை தீவிரமாக தேடி வந்துள்ளனர். தொடர்ந்து, சம்பவம் தொடர்பாக அப்பகுதியில் உள்ள சிசிடிவி காட்சிகளையும் ஆய்வு செய்து விசாரணை நடத்தினர். அப்போது, அங்கிருந்த சிசிடிவி காட்சிகள் மூலம் மாணவிக்கு பாலியல் தொல்லை கொடுத்த நபரை காவல்துறையினர் அடையாளம் கண்டனர். இதையடுத்து, அந்த நபரை கைது செய்த போலீசார், அவரை கைது செய்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.