சிவகங்கை மாவட்டம், காரைக்குடியில் அழகப்பா பல்கலைக்கழகம் செயல்பட்டு வரும் நிலையில், இந்த பல்கலைக்கழகத்துக்கு உட்பட்ட அரசு தொழில்நுட்பக் கல்லூரி ஒன்று இயங்கி வருகிறது. இந்தக் கல்லூரியில், இரண்டாம் ஆண்டு படித்து வரும் மாணவி ஒருவர், விடுதியில் தங்கியுள்ளார். இந்நிலையில், நேற்று நள்ளிரவு இவர் விடுதியில் கழிவறைக்கு தனியாக சென்றுள்ளார்.
அப்போது, விடுதியில் அங்குப் பாதுகாப்புப் பணியில் இருந்த காவலாளி ஒருவர், மாணவியை பின் தொடர்ந்து சென்றுள்ளார். மாணவி தனியாக வந்திருப்பதை அறிந்த காவலாளி, மாணவிக்கு பாலியல் தொல்லை கொடுத்துள்ளார். இதனால் பதறிப்போன அந்த மாணவி, உடனே கத்தி கூச்சலிட்டுள்ளார். மாணவியின் அலறல் சத்தம் கேட்ட மற்ற மாணவிகள் ஓடி வந்து, மாணவியிடம் என்ன நடந்தது என விசாரித்துள்ளனர்.
அப்போது மாணவி, தனக்கு காவலாளி பாலியல் தொல்லை கொடுத்ததை குறித்து கூறியுள்ளார். இதனால் அதிர்ச்சி அடைந்த சக மாணவிகள், நடந்த சம்பவம் தொடர்பாகக் காரைக்குடி அனைத்து மகளிர் காவல் நிலையத்திற்குத் தகவல் அளித்துள்ளனர். மாணவிகள் அளித்த புகாரின் அடிப்படையில் வழக்கு பதிவு செய்த போலீசார், தீவிர விசாரணை மேற்கொண்டனர்.
போலீசார் நடத்திய விசாரணையில், விடுதியின் காவலாளி மாணவிக்கு பாலியல் தொல்லை கொடுத்ததது உறுதியானது. இதனையடுத்து, போலீசார் விடுதி காவலாளியை கைது செய்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். மாணவிகளுக்கு பாதுகாப்பாக இருக்க வேண்டிய காவலாளியே, மாணவிக்கு பாலியல் பாலியல் தொல்லை கொடுத்த சம்பவம் பெரும் அதிர்ச்சியையும், பரபரப்பையும் ஏற்படுத்தியுள்ளது.
Read more: “எனக்கு உன்ன விட, உன்னோட பொண்ண தான் பிடிச்சுருக்கு” காதலனால், காதலியின் மகளுக்கு நேர்ந்த சோகம்..