fbpx

குட் நியூஸ்…! இனி அனைத்து கல்லூரிகளுக்கும் ஒரே நேரத்தில் தேர்வு…! அமைச்சர் அதிரடி அறிவிப்பு.‌‌..!

தமிழகம் முழுவதும் அனைத்து கல்லூரிகளுக்கும் ஒரே நேரத்தில் தேர்வு நடத்தப்படும்.

சென்னையில் செய்தியாளர்களிடம் பேசிய உயர் கல்வித்துறை அமைச்சர் பொன்முடி; தமிழகத்தில் தற்போது அனைத்து பல்கலைக்கழகங்களிலும்‌ பட்டப்படிப்பகளுக்கான தேர்வுகள்‌ மற்றும்‌ தேர்வு முடிவுகள்‌ வெவ்வேறு தேதிகளில்‌ வெளியிடப்பட்டு வருகிறது. அதனை மாற்றி 12-ம்‌ வகுப்பு பொதுத்தேர்வு எப்படி நடைபெறுகிறதோ அதே போல அனைத்து பல்கலைக்கழகங்களின்‌ கீழ்‌ உள்ள கல்லூரிகளில்‌ ஒரே நாளில்‌தேர்வும்‌, ஒரே நாளில்‌ தேர்வு முடிவுகளும்‌ வரும்‌ ஆண்டு முதல்‌ நடைமுறைப்படுத்தப்படும்‌.

அதனைத்‌ தொடர்ந்து முதுகலை படிப்பில்‌ மாணவர்கள்‌ சேர்வதற்கான விண்ணப்பமும்‌ ஒரே நேரத்தில்‌ பெறப்பட்டு, மாணவர்கள்‌ விரும்பும்‌ கல்லூரியில்‌ சேர்க்கை முறை அடுத்தாண்டு முதல்‌ அமுல்படுத்தப்படும்‌. இதனால்‌ உயர்கல்வித்துறையில்‌ பல்வேறு முன்னேற்றங்கள்‌ ஏற்படும்‌ என தெரிவித்துள்ளார்.

Vignesh

Next Post

மக்களே கவனம்!... போலி 500 ரூபாய் நோட்டுகள் எண்ணிக்கை அதிகரிப்பு!... ரிசர்வ் வங்கி தகவல்!

Thu Jun 1 , 2023
ரூ.4.55 கோடி மதிப்பிலான போலி 500 ரூபாய் நோட்டுகளை கண்டறிந்துள்ளதாக ரிசர்வ் வங்கி தகவல் தெரிவித்துள்ளது. 2022-23 ஆம் ஆண்டில் இந்தியாவில் போலி 500 ரூபாய் நோட்டுகளின் எண்ணிக்கை 14.4% அதிகரித்துள்ளதாக ரிசர்வ் வங்கி வெளியிட்ட வருடாந்திர அறிக்கையில் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி, ரிசர்வ் வங்கி மற்றும் மற்ற வங்கிகள் ரூ.3.98 கோடி மதிப்பிலான 79,669 கள்ள நோட்டுகளில் இருந்து, ரூ.4.55 கோடி மதிப்பிலான 91,110 ரூபாய் 500 நோட்டுகளை […]

You May Like