fbpx

#கரூர்: 3 வது மாடியில் இருந்து கீழே குதித்து தற்கொலைக்கு முயற்சி செய்த கல்லூரி மாணவர்..!

கரூர் மாவட்ட பகுதியில் வில்லாபாளையத்தில் குணசேகரன் மகனான அரவிந்த் சபரி(18) எனபவர் வசித்து வருகிறார். இவர் அரவக்குறிச்சி பகுதியில் இயங்கி வரும் தனியார் கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் பி.பி.ஏ. முதலாம் ஆண்டு பயின்று வருகிறார். 

இந்த நிலையில் நேற்றைய தினத்தில் கல்லூரிக்கு சென்று செமஸ்டர் தேர்வுக்கான நுழைவுச் சீட்டைப் பெறுவதற்காக சபரி சென்றுள்ளார். கல்லூரியிலேயே , அரவிந்த் சபரி புகையிலை பொருட்களை உபயோகித்ததாக தெரியவந்துள்ளது. 

இதனால் கல்லுாரி நிர்வாகம் பெற்றோரை அழைத்து வரும்படி அரவிந்த் சபரியிடம் கல்லூரி நிர்வாகத்தினர் சொல்லியுள்ளனர். இவர்கள் இவ்வாறு கூறியதால் மனமுடைந்த சபரி, கல்லூரியின் 3வது மாடிக்கு சென்று திடீரென , அங்கிருந்து கீழே குதித்துள்ளார்.

இதனை பார்த்த சக மாணவர்கள் மற்றும் பேராசிரியர்கள் பெரும் அதிர்ச்சியடைந்தனர். கீழே விழுந்ததில் பலத்த காயமடைந்த அவரை மீட்டு அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர். இது பற்றி காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரணை செய்து வருகின்றனர்.

Rupa

Next Post

சுய தொழில் தொடங்க ஆர்வமா..? மானியத்துடன் கூடிய கடன்..!! வெளியான அசத்தல் அறிவிப்பு..!!

Sun Dec 18 , 2022
சுய தொழில் தொடங்க ஆர்வம் உள்ளவர்களுக்கு மானியத்துடன் கூடிய கடன் வழங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. தொழில்வளம் பெருகுவதற்கான இணக்கச் சூழலை மேம்படுத்துவதிலும், அதன் மூலம் வேலைவாய்ப்புகளை உருவாக்குவதிலும் தமிழக அரசு உறுதி கொண்டுள்ளது. அதன்படி, சுயதொழில் புரிவதில் ஆர்வம் உள்ளவர்கள் உதவி பெறத்தக்க மானியத்துடன் கூடிய கடன் உதவித் திட்டங்களை முனைப்புடன் செயல்படுத்தி வருகிறது. மத்திய அரசின் 60% நிதி பங்களிப்புடன் சுய தொழில் தொடங்க ஆர்வம் உள்ளவர்களுக்கு மானியத்துடன் […]
சொந்தமாக தொழில் தொடங்க விரும்பும் நபர்களுக்கு சூப்பர் வாய்ப்பு..!! நாளையே கடைசி..!! உடனே இதை பண்ணுங்க..!!

You May Like