கோவை மாவட்டம் சின்னியம்பாளையம் பகுதியில் ஆர்ஜி புதூரில் வேட்டைக்காரன் கோவில் ஒன்று இருக்கிறது. இந்த பகுதி அடர்ந்த புதராகவும் பொதுமக்கள் செல்வதற்கு பயப்படக்கூடிய பகுதியாகவும் இருக்கிறது. ஆகவே தனியாக இந்த வழியை செல்வதற்கு மக்கள் மிகுந்த அச்சத்துடன் இருப்பார்கள் என்று கூறப்படுகிறது.
இந்த பகுதியில் நேற்று முன்தினம் இரவு புவனேஷ் குமார் என்பவர் அவருடைய நண்பர் பாலாஜி மற்றும் சிலருடன் மது அருந்து கொண்டிருந்தார் என்று கூறப்படுகிறது. இத்தகைய நிலையில், அதே பகுதியைச் சேர்ந்த நந்தகுமார் (22) மற்றும் அவருடைய நண்பர்களும் அதே பகுதியில் மற்றொரு இடத்தில் மது அருந்தி கொண்டிருந்ததாக சொல்லப்படுகிறது. பாலாஜி, புவனேஷ்குமார் மற்றும் நந்தகுமார் என்று நண்பர்கள் மூவருக்கும் இடையே மது போதையில் திடீரென்று வாக்குவாதம் ஏற்பட்டிருக்கிறது கடைசியில் வாக்குவாதம் கைகளப்பாகவும் மாறி உள்ளது.
மது போதையில் இருந்த இரண்டு குழுவை சார்ந்தவர்களும் சின்னியம்பாளையம் பகுதியில் ஒருவரை ஒருவர் தாக்கிக் கொண்டதாக கூறப்படுகிறது. அப்போதும் நந்தகுமார் மற்றும் அவருடைய நண்பர்கள் மறைத்து வைத்திருந்த கத்தியால் புவனேஷ் குமாரை குத்தி இருக்கின்றார்.
ரத்த காலத்தில் சரிந்த புவனேஷ் குமாரை உடனடியாக கோவை அரசு மருத்துவமனையில் சேர்த்துள்ளனர். ஆனால் அவர் வரும் வழியிலேயே பரிதாபமாக உயிரிழந்ததாக அவரை பரிசோதித்த மருத்துவர்கள் கூறி இருக்கிறார்கள். இவர் ஒரு கல்லூரி மாணவர் என்று தெரிய வந்துள்ளது.
இந்த சம்பவத்தை தொடர்ந்து, அங்கிருந்து நந்தகுமார் மற்றும் அவருடைய நண்பர்கள் உள்ளிட்டோர் தப்பிச் சென்று விட்டனர். தகவல் அறிந்து வந்த பீளமேடு காவல்துறையினர் உடனடியாக விசாரணை நடத்தினர் கோவை மாநகர காவல் துறையை சேர்ந்தவர்கள் கல்லூரி மாணவர் கொலை செய்யப்பட்டது தொடர்பாக வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றன.