தென்காசி மாவட்டம் இலத்தூர் பகுதியில் லட்சுமணன் என்பவருக்கு சொந்தமான வீட்டில் செப்டிக் டேங்கை சுத்தம் செய்த போது அதில் ஒரு மனித எலும்புக்கூடு இருப்பதை பார்த்து தொழிலாளர்கள் அதிர்ச்சி அடைந்தனர். இந்த சம்பவம் குறித்து இவத்தூர் காவல்துறையினருக்கு தகவல் கொடுக்கப்பட்டது. சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து எலும்பு கூடாக மீட்கப்பட்ட நபர் யார்? அவரை கொலை செய்து கழிவுநீர் தொட்டியில் போட்டது யார்? என்பது தொடர்பாக தீவிர விசாரணை நடத்தி வந்தனர்.
அந்தப் பகுதியில் காணாமல் போனவர்கள் யாராவது இருக்கிறார்களா என்பது தொடர்பாக விசாரணை மேற்கொண்டனர். காவல்துறையினர் அந்த விசாரணையில் அதிக பகுதியை சேர்ந்த கல்லூரி மாணவன் மாடசாமி சென்ற 7 மாதங்களுக்கு முன்னர் காணாமல் போய் இருப்பது தெரிய வந்தது. இது குறித்த வழக்கு நீதிமன்றத்தின் நிலுவையில் இருக்கிறது என்பதும் தெரியவந்துள்ளது.
இதற்கு நடுவே லட்சுமணன் என்பவர் வீட்டில் வாடகைக்கு குடியிருந்த திருமணமான பேச்சியம்மாள் என்பவருக்கும் இந்த கொலையில் தொடர்பு இருக்கிறது என்ற விவரமும் தெரிய வந்துள்ளது. ஆகவே பிரியா என்பவர் அவருடைய தாய் மாரியம்மாள் மற்றும் அவருடைய சகோதரரான கல்லூரி மாணவர் முத்துப்பாண்டி உள்ளிட்டோரை காவல்துறையினர் கைது செய்து இருக்கிறார்கள். அவர்களிடம் மேற்கொள்ளப்பட்ட விசாரணையில் பல்வேறு அதிர்ச்சி தகவல்கள் வெளியாகி இருக்கிறது.
அதாவது கொலை செய்யப்பட்ட மாடசாமிக்கும், பிரியாவுக்கும் இடையே கள்ளத்தொடர்பு இருந்து வந்திருக்கிறது அவர்கள் தனிமையில் இருந்த போது அதை வீடியோவாக எடுத்து வைத்து பிரியாவை மிரட்டி மாடசாமி அடிக்கடி பாலியல் தொந்தரவு வழங்கியுள்ளார். அதோடு குடும்பத்தை விட்டு தன்னுடன் வராவிட்டால் இந்த வீடியோவை கணவரிடம் காட்டி விடுவேன் என்று மிரட்டி இருக்கிறார் மாடசாமி. இதனால் அவரை கழுத்தை நெரித்து கொலை செய்து தன்னுடைய தாய் மற்றும் தம்பியின் உதவியோடு செப்டிக் டேங்கில் அவரது உடலை போட்டுவிட்டு கோவைக்கு குடும்பத்துடன் சென்று விட்டனர் என்பதும் தெரிய வந்துள்ளது.