fbpx

பயங்கரவாதத்திற்கு நிதியுதவி அளிப்பதை எதிர்த்துப் போராட வேண்டும்…! பிரிக்ஸ் மாநாட்டில் மோடி அதிரடி

பயங்கரவாதத்திற்கு நிதியுதவி அளிப்பதை எதிர்த்துப் போராட, நமக்கு அனைவரின் ஒருமித்த மற்றும் உறுதியான ஆதரவு தேவை என பிரதமர் மோடி பிரிக்ஸ் மாநாட்டில் வலியுறுத்தி உள்ளார்.

விரிவுபடுத்தப்பட்ட பிரிக்ஸ் குடும்பம் என்ற முறையில் நாம் முதன்முறையாக சந்திப்பதில் நான் மிகவும் மகிழ்ச்சி அடைகிறேன். பிரிக்ஸ் குடும்பத்தில் இணைந்துள்ள அனைவரையும் வரவேற்று பேசிய பிரதமர் மோடி; பிரிக்ஸ் அமைப்புக்கு கடந்த ஓராண்டு காலமாக வெற்றிகரமாக தலைமை வகித்ததற்காக அதிபர் புதினுக்கு எனது வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

போர்கள், பொருளாதார நிச்சயமற்ற தன்மை, பருவநிலை மாற்றம், பயங்கரவாதம் போன்ற பல்வேறு முக்கிய சவால்களை உலகம் எதிர்கொண்டுள்ள நேரத்தில், இந்த சந்திப்பு நடைபெறுகிறது. வடக்கு- தெற்கு பிரிவினை, கிழக்கு – மேற்கு பிரிவினையைப் பற்றி உலகம் பேசுகிறது. பணவீக்கத்தைத் தடுத்தல், உணவுப் பாதுகாப்பை உறுதி செய்தல், எரிசக்தி பாதுகாப்பு, சுகாதாரப் பாதுகாப்பு, நீர் பாதுகாப்பு போன்றவை உலகில் உள்ள அனைத்து நாடுகளும் முன்னுரிமை அளிக்க வேண்டிய விஷயங்களாகும்.

தொழில்நுட்பத்தின் இந்த சகாப்தத்தில், சைபர் டீப்ஃபேக், தவறான தகவல் பரவுதல் போன்ற புதிய சவால்கள் உருவாகியுள்ளன. இத்தகைய நேரத்தில், பிரிக்ஸ் மீது அதிக எதிர்பார்ப்புகள் உள்ளன. பன்முகத்தன்மை கொண்ட மற்றும் உள்ளடக்கிய மேடையாக, பிரிக்ஸ் அனைத்து துறைகளிலும் நேர்மறையான பங்கை ஆற்ற முடியும் என்று நான் நம்புகிறேன். இந்த விஷயத்தில், நமது அணுகுமுறை மக்களை மையமாகக் கொண்டதாக இருக்க வேண்டும். பிரிக்ஸ் அமைப்பு பிளவுபடுத்தும் அமைப்பு அல்ல. மனித குலத்தின் நலனுக்காக செயல்படும் அமைப்பு என்ற செய்தியை நாம் உலகிற்கு அளிக்க வேண்டும்.

நாங்கள் பேச்சுவார்த்தையையும் ராஜதந்திரத்தையும் ஆதரிக்கிறோம், போரை அல்ல. கோவிட் போன்ற ஒரு சவாலை நாம் ஒன்றிணைந்து சமாளிக்க முடிந்ததைப் போலவே, எதிர்கால சந்ததியினருக்கு பாதுகாப்பான, வலுவான, வளமான எதிர்காலத்தை உறுதி செய்வதற்கான புதிய வாய்ப்புகளை நிச்சயமாக உருவாக்க முடியும். பயங்கரவாதத்திற்கு நிதியுதவி அளிப்பதை எதிர்த்துப் போராட, நமக்கு அனைவரின் ஒருமித்த மற்றும் உறுதியான ஆதரவு தேவை. இந்த முக்கியமான விஷயத்தில் இரட்டை வேடம் போட இடமில்லை. நமது நாடுகளில் இளைஞர்கள் தீவிரமயப்படுவதைத் தடுக்க நாம் தீவிர நடவடிக்கைகளை எடுக்க வேண்டும்.

ஐநா-வில் நீண்ட காலமாக நிலுவையில் உள்ள சர்வதேச பயங்கரவாதத்தை ஒடுக்குவது குறித்த விரிவான செயல்திட்டத்தில் இணைந்து பணியாற்ற வேண்டும். அதேபோல், இணையதள பாதுகாப்பு, பாதுகாப்பான செயற்கை நுண்ணறிவு ஆகியவற்றுக்கான உலகளாவிய விதிமுறைகளை வகுக்க நாம் பணியாற்ற வேண்டும் என்றார்.

English Summary

Combating the financing of terrorism

Vignesh

Next Post

கொங்கு மாவட்டங்களை சுத்துப் போட்ட பெருமழை..!! இன்று 9 மாவட்டங்களில் பயங்கர சம்பவம் இருக்கு..!! தமிழ்நாடு வெதர்மேன் தகவல்..!!

Thu Oct 24 , 2024
According to the Meteorological Department, 9 districts of Nilgiris, Coimbatore, Erode, Salem, Krishnagiri, Dharmapuri, Tirupattur, Kallakurichi and Tiruvannamalai will experience very heavy rain today.

You May Like