fbpx

காமன்வெல்த் போட்டி.. பளுதூக்குதலில் இந்தியாவுக்கு 3-வது தங்கம்.. அச்சிந்தா ஷூலி அசத்தல்

காமன்வெல்த் போட்டியின் பளு தூக்குதலில் இந்தியாவுக்கு மேலும் ஒரு தங்கம் கிடைத்துள்ளது..

2022-ம் ஆண்டுக்கான காமன்வெல்த் போட்டி கடந்த 28-ம் தேதி முதல் இங்கிலாந்தில் பர்மிங்காம் நகரில் கோலாகலமாக நடைபெற்று வருகிறது.. 72 நாடுகள், 200-க்கும் மேற்பட்ட வீரர்கள் இந்த காமன்வெல்த் போட்டியில் பங்கேற்றுள்ளனர்.. இதில் இந்தியா இதுவரை பளுதூக்குதலில் 2 தங்கம், 2 வெள்ளி, ஒரு வெண்கலம் என 5 பதக்கங்களை வென்றுள்ளது..

இந்நிலையில் ஆண்களுக்கான பளு தூக்குதலின் இறுதி போட்டி நேற்று நடைபெற்றது.. அதி இந்தியாவின் அச்சிந்தா ஷூலி மொத்தம் 313 கிலோ எடையை தூக்கி தங்கப்பதக்கத்தை வென்று அசத்தினார். அவர் ஸ்னாட்ச் பிரிவில் 143 கிலோவும், கிளீன் அண்ட் ஜெர்க்கில் 170 கிலோவும் தூக்கி முதலிடத்தார்.. இதன் மூலம் இந்தியாவுக்கு காமன்வெல்த் போட்டியில் மேலும் ஒரு தங்கம் கிடைத்துள்ளது..

மலேசியாவின் ஹிதாயத் முஹமது 303 கிலோ எடையுடன் இரண்டாவது இடத்தையும், கனடாவின் ஷாட் டார்ச்சினி 298 கிலோ எடையுடன் 3-ம் இடத்தையும் பிடித்தார்.. அச்சிந்தா ஷூலி தங்கப்பதக்கம் வென்றதன் மூலம் இந்தியாவின் பதக்க எண்ணிக்கை 6-ஆக உயர்ந்துள்ளது.. இதுவரை 3 தங்கம், 2 வெள்ளி, 1 வெண்கல பதக்கங்களை இந்தியா வென்றுள்ளது..

முன்னதாக காமன்வெல்த் ஆண்களுக்குகான பளுதூக்குதல் போட்டியில் இந்தியாவின் ஜெரிமி லால்ரின்னுங்கா தங்கம் வென்றார்.. பெண்கள் பிரிவில் மீராபாய் சானு ஏற்கனவே தங்கப்பதக்கம் வென்றுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது..

Maha

Next Post

LPG சிலிண்டர் விலை முதல் ITR தாக்கல் வரை.. இன்று முதல் புதிய விதிகள் அமல்...

Mon Aug 1 , 2022
ஆகஸ்ட் 1, முதல் பல்வேறு விதிகள் மாற்றப்படுகின்றன. இந்த மாற்றங்கள் சாமானியர்களை நேரடியாக பாதிக்கும் எனவே ஆகஸ்ட் 1 முதல் அமலுக்கு வரும் இந்த ஐந்து மாற்றங்கள் குறித்து தெரிந்து கொள்வது அவசியம். பாங்க் ஆஃப் பரோடா காசோலை செலுத்தும் முறை (பிபிஎஸ்) : 5,00,000 ரூபாய்க்கு மேல் வழங்கப்படும் காசோலைகளுக்கு கட்டாய நேர்மறை ஊதிய முறையை (PPS) அறிமுகப்படுத்த பாங்க் ஆஃப் பரோடா முன்மொழிந்துள்ளது. வாடிக்கையாளர்கள் பணம் செலுத்தும் […]

You May Like