fbpx

கடுமையான குண்டுவீசிச்சு.., தகவல் தொடர்பு துண்டிப்பு!… நாளுக்கு நாள் உக்கிரமடையும் போர்!… காசாவில் இதுவரை இல்லாத அளவில் வான்வழித் தாக்குதல்!

ஹமாஸ் அமைப்புக்கு எதிராக இஸ்ரேல் ராணுவம், மிகவும் அழிவுகரமான தாக்குதலை கட்டவிழ்த்துவிட்டுள்ளதால் வடக்கு காசாவில் தகவல் தொடர்பு மற்றும் இணைய சேவைகள் அனைத்தும் துண்டிக்கப்பட்டுள்ளன.

கடந்த 7 ஆம் தேதி யாரும் எதிர்பாராத வகையில் திடீரென இஸ்ரேலை நோக்கி ஏவுகணைகளை பாய விட்டது ஹமாஸ் அமைப்பு. காசா முனையில் இருந்து ஏவப்பட்ட இந்த ஏவுகணை தாக்குதலால் திக்குமுக்காடிப்போன இஸ்ரேல்,பதிலடி தாக்குதல் நடவடிக்கையை ஆரம்பித்தது. அப்போது முதல் கிட்டத்தட்ட ஒரு வாரத்தை நெருங்கிய போர் இரு தரப்பினருக்கும் இடையே நீடித்து வருகிறது. 22 வது நாளாக இஸ்ரேல் -ஹமாஸ் அமைப்பினர் இடையேயான போர் நீடித்து வருகிறது.

ஹமாஸ் அமைப்பினர் இருந்த இடம் தெரியாமல் அழிக்கப்படுவார்கள் என்று இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு சூளுரைத்துள்ளார். இஸ்ரேலின் தீவிர தாக்குதலால் காசாவின் மத்திய மற்றும் வடக்குப் பகுதிகள் மோசமான தாக்குதலுக்கு உள்ளாகியுள்ளன. இதனிடையே, கடந்த 7 ஆம் தேதி போர் தொடங்கியதில் இருந்து இதுவரை இல்லாத அளவுக்கு காசா மீது இஸ்ரேல் தாக்குதலை தொடுத்துள்ளது.

காசாவின் வடக்கு பகுதியில் மிகக் கடுமையான தாக்குதல் இன்று இரவு நடைபெற்று வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. காசா முனையில் இணைய சேவை துண்டிக்கப்பட்டதாக ஹமாஸ் அமைப்பு தெரிவித்துள்ளது. காசா உடனான தொடர்பு துண்டிக்கப்பட்டு இருப்பதாகவும் தகவல்கள் கூறுகின்றன. முன்னெப்போதும் இல்லாத அளவுக்கு ஹமாஸ் அமைப்பினரை குறிவைத்து காசா மீது இஸ்ரேல் வான்வழி தாக்குதல் நடத்தி வரும் நிலையில், தற்போது தரை வழி தாக்குதல்களையும் விரிவுப்படுத்தியுள்ளது.

2 மில்லியனுக்கும் அதிகமான மக்கள் வசிக்கும் என்கிளேவ் மீது இஸ்ரேலிய விமானப்படை அதன் மிக அழிவுகரமான தாக்குதலில் வெடித்து சிதறும் வீடியோ ஒன்று வெளியாகியுள்ளது. இதனால், பாலஸ்தீனிய நெட்வொர்க் ஜவ்வால் மற்றும் உலகளாவிய கண்காணிப்பு குழு Netblocks தொலைபேசி மற்றும் இணையம் உள்ளிட்ட சேவைகள் துண்டிக்கப்பட்டதால் உறவினர்களை தொடர்பு கொள்ள முடியாமல் மக்கள் ஆங்காங்கே அச்சத்தில் உறைந்துள்ளனர். இணைய முடக்கம் காரணமாக காசாவில் உள்ள முக்கிய அவசர சேவையான பாலஸ்தீனிய ரெட் கிரசன்ட், தனது செயல்பாட்டு அறையில் இருந்து துண்டிக்கப்பட்டதாகக் கூறியது. காயங்களை சுத்தம் செய்ய துவைக்கும் திரவம் மற்றும் வினிகரைப் பயன்படுத்துவதாகவும், மருத்துவப் பொருட்கள் தீர்ந்துவிட்டதால் மயக்க மருந்தை வழங்குவதாகவும் காசாவில் உள்ள மருத்துவர்கள் தெரிவித்தனர்.

Kokila

Next Post

இன்று 1 மணிக்கு 51,000 பேருக்கு வேலைவாய்ப்பு நியமனக் கடிதம் வழங்கும் பிரதமர் மோடி..!

Sat Oct 28 , 2023
புதிதாகப் பணியில் சேர்க்கப்பட்ட சுமார் 51,000 பேருக்கு நியமனக் கடிதங்களைப் பிரதமர் நரேந்திர மோடி இன்று பிற்பகல் 1 மணிக்கு காணொலிக் காட்சி மூலம் வழங்கவுள்ளார். இந்நிகழ்வில், பணியில் புதியதாக நியமிக்கப்பட்டவர்களிடையே பிரதமர் உரையாற்றவுள்ளார். நாடு முழுவதும் 37 இடங்களில் வேலைவாய்ப்புத் திருவிழா நடைபெற உள்ளது. இந்த முயற்சிக்கு ஆதரவளிக்கும் வகையில் மத்திய அரசுத் துறைகள் மற்றும் மாநில அரசுகள் / யூனியன் பிரதேசங்களில் ஆட்சேர்ப்புகள் நடைபெறுகின்றன. நாடு முழுவதிலுமிருந்து […]

You May Like