fbpx

42 வயது இட்லிக்கடை பெண்ணுடன் பழகுவதில் போட்டி..!! சாலையோரத்தில் சடலமாக கிடந்த ரவுடி..!!

சென்னையை அடுத்த தாம்பரம் பைபாஸ் சாலையோரம் முட்புதரில் கடந்த 9ஆம் தேதியன்று, வாலிபர் ஒருவர் கொலை செய்யப்பட்டு மூட்டையில் அழுகிய நிலையில் உடல் கண்டெடுக்கப்பட்டது. இது குறித்து தாம்பரம் காவல் நிலையத்தில் வழக்குப்பதிவு செய்து “மேகா” எனும் பெயர் மட்டும் கையில் பச்சை குத்திய அடையாளம் இருந்த நிலையில், அதனை புகைப்படம் எடுத்த போலீசார், காவல் நிலைய தகவல் பலகையில் ஒட்டினர். மேலும், குற்ற ஆவண காப்பகத்திற்கும் அனுப்பிய நிலையில், அந்த நபர் யார் என்று தெரியாமல் போலீசார் விசாரணை நடத்தி வந்தனர்.

இதற்கிடையே, சென்னை பெரியார் நகரை சேர்ந்த பல்லு கார்த்திக் (38) என்பவர் காணவில்லை என காவல்நிலையத்தில் வழக்குப்பதிவு செய்யப்பட்டது. அவர் மீது, கொலை முயற்சி, வழிப்பறி மற்றும் குண்டர் சட்டத்தில் சிறை என பல்வேறு வழக்குகள் உள்ளன. இந்நிலையில், பெரவள்ளூர் காவல் நிலைய சரித்திர பதிவேடு குற்றவாளியாக கார்த்திக் வலம் வந்துள்ளார். இதனையடுத்து, குற்ற ஆவண காப்பகத்தில் மேகா எனும் பச்சை குத்திய நபரின் உடல் தாம்பரம் காவல் எல்லையில் கிடைத்த தகவலின் பேரில், தாம்பரம் போலீசாருக்கு தகவல் வர, தாம்பரம் உதவி ஆணையாளர் சீனிவாசன் உத்திரவின் பேரில் ஆய்வாளர் சார்லஸ் மேற்பார்வையில் நடத்தப்பட்ட விசாரணையில் கொலை செய்யப்பட்டவர் கார்த்திக் என்பது தெரியவந்தது.

கார்த்திக், மேகா என்ற பெண்ணை திருமணம் செய்து பிரிந்த நிலையில், மதுரவாயில் கங்கா நகரில் தங்கி சக சிறையில் பழக்கமான சதாம், அருண், சரவணன் ஆகியோருடன் பழகி கஞ்சா விற்பனையில் ஈடுபட்டதும் விசாரணையில் தெரியவந்தது. மேலும், தாம்பரம் போலீசார் 3 பேரையும் விசாரணை நடத்தியதில் மூவரும் சேர்ந்து கார்த்திக்கை கொலை செய்து சடலமாக வீசியதை ஒப்புகொண்டு வாக்குமூலமாக அளித்தனர். அவர்கள் வசிக்கும் பகுதியில் கணவரை பிரிந்த பெண் சுபா (42) என்பவர் “புது சுவை டீ ஸ்டால்” என்ற பெயரில் இட்லிக்கடை நடத்தி வந்ததாகவும், அப்பெண்ணுடன் கார்த்திக் நெருக்கமாக பழகியதாகவும் அதுவே கொலைக்கு காரணம் என்றும் அவர்கள் வாக்குமூலம் அளித்துள்ளனர்.

Chella

Next Post

ஓசூரில் பழிக்கு பழியாக நடைபெற்ற பரபரப்பு சம்பவம்…..! டீக்கடையில் வாலிபர் படுகொலை…..!

Sat May 13 , 2023
கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் நகராட்சி பெரியார் நகர் பகுதியில் டீ கடையில் டீ சாப்பிட்டுக் கொண்டிருந்த வாலிபர் ஒருவரை இருசக்கர வாகனத்தில் வந்த 2 மர்ம நபர்கள் பட்டப் பகலில் அரிவாளால் சரமாரியாக வெட்டி கொலை செய்துவிட்டு அங்கிருந்து தப்பிச் சென்று தலைமறைவாகிவிட்டனர். இது குறித்து ஓசூர் துணை காவல் துறை கண்காணிப்பாளர் பாபு பிரசாத் தலைமையில் காவல் துறையினர் விசாரணை நடத்தினர். அந்த விசாரணையில், உயிரிழந்தவர் சொப்பட்டி கிராமத்தைச் […]

You May Like