fbpx

ஆசிரியர் தகுதித் தேர்வு முடித்தவர்களுக்கு போட்டித் தேர்வு..! எப்போது தெரியுமா? வெளியான முக்கிய அறிவிப்பு

ஆசிரியர் தகுதித் தேர்வு முடித்தவர்களுக்கு டிசம்பர் மாதம் போட்டித் தேர்வு நடைபெறும் என அறிவிப்பு வெளியாகியுள்ளது.

தமிழகத்தில் இடைநிலை ஆசிரியர்களும், பட்டதாரி ஆசிரியர்களும் கட்டாயம் ஆசிரியர் தகுதித் தேர்வு எழுதி தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும் என கட்டாயக் கல்வி உரிமைச் சட்டத்தில் தெரிவிக்கப்பட்டது. தமிழகத்தில் ஆரம்பத்தில் இந்த தகுதித்தேர்வில் தேர்ச்சி பெற்றவர்கள் அரசுப் பள்ளிகளில் பணி நியமனம் செய்யப்பட்டனர். ஆனால், முந்தைய அதிமுக ஆட்சியில் தகுதித் தேர்வு முதல்கட்ட தேர்வுதான் என்றும் இரண்டாவதாக அரசுப் பணிக்கு மற்றொரு போட்டித்தேர்வை எதிர்கொள்ள வேண்டும் என அரசாணை வெளியிடப்பட்டது. இந்த அரசாணை காரணமாக யாரும் எளிதில் வேலைக்கு செல்ல முடியாது என்றும் எனவே இந்த அரசாணையை ரத்து செய்துவிட்டு, தகுதித் தேர்வில் தேர்ச்சி பெற்றாலே, நேரடியாக பணி நியமனம் செய்யக்கோரியும், தகுதித் தேர்வில் தேர்ச்சி பெற்றவர்கள் போராட்டங்கள் நடத்தி வந்தனர்.

ஆசிரியர் தகுதித் தேர்வில் 1% தேர்வர்களே தேர்ச்சி! என்ன காரணம்?- Dinamani

இதற்கிடையே, கடந்த சட்டமன்ற தேர்தலின்போது திமுக தனது தேர்தல் அறிக்கையில், மேற்குறிப்பிட்ட அரசாணை ரத்து செய்யப்படும் என கூறியிருந்தது. அதன்படி, அரசாணையை ரத்து செய்ய வேண்டும் என தகுதித் தேர்வில் தேர்ச்சி பெற்ற ஆசிரியர்கள் வலியுறுத்தி வரும் நிலையில், அரசாணை ரத்து இல்லை என்பது தற்போது தெளிவாகியுள்ளது. நடப்பு ஆண்டில் பல்வேறு பணிகளுக்கான போட்டித்தேர்வுகள், காலிப் பணியிங்களின் எண்ணிக்கை குறித்த விவரங்களை கடந்த 5ஆம் தேதி ஆசிரியர் தேர்வு வாரியம் வெளியிட்டிருந்தது. தற்போது தகுதித் தேர்வு குறித்த புதிய தகவல் வெளியாகி உள்ளது. ஆசிரியர் தகுதி தேர்வு முடித்தவர்களுக்கு போட்டித்தேர்வு நடைபெறும் என ஆசிரியர் தேர்வு வாரியம் அறிவித்துள்ளது.

ஆசிரியர் தகுதித்தேர்வு: விண்ணப்பிக்க ஏப்ரல் 26-ம் தேதி வரை கால அவகாசம்  நீட்டிப்பு-Tet exam application date extended till April 26

ஆசிரியர் தகுதித் தேர்வு முடித்தவர்களுக்கு போட்டித் தேர்வு கட்டாயம் என்று 2018ஆம் ஆண்டு அரசாணை வெளியிட்டாலும் கூட அந்த தேர்வு இதுவரை நடைபெறவில்லை. முதல் முறையாக வரும் டிசம்பர் மாதம் தேர்வு நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. 1,874 பட்டதாரி ஆசிரியர் பணியிடங்கள், 3,987 இடைநிலை ஆசிரியர் பணியிடங்கள் என மொத்தம் 5,861 பணியிடங்களுக்கு போட்டித் தேர்வு நடைபெற உள்ளதாக ஆசிரியர் தேர்வு வாரியம் தெரிவித்துள்ளது.

Chella

Next Post

அதிகாலையில், நெடுஞ்சாலையில் குட்டியை ஈன்ற யானை: பிரசவத்தின் போது அரனாக நின்ற சக யானைகள்...! நெகிழ்ச்சி சம்பவம்..!

Thu Jul 7 , 2022
கேரள மாநிலம் இடுக்கி மாவட்டத்தில், மறையூர் அருகே செவ்வாய்க்கிழமை அதிகாலை நெடுஞ்சாலையின் நடுவே யானை ஒன்று தன் குட்டியை ஈன்றது. இதன் காரணமாக, தமிழ் நாடு மற்றும் கேரளாவை இணைக்கும் இடுக்கி மாவட்டத்தில் உள்ள மறையூர் வழியாக செல்லும் நெடுஞ்சாலையில் சுமார் ஒரு மணி நேரம் போக்குவரத்து தடைபட்டது. கருவுற்றிருந்த யானை ஒன்று, பிரசவ வலி ஏற்பட்டதும், பிளிறலுடன் மரையூர் சாலைப் பகுதிகுகு வந்துள்ளது. பிளிறிக் கொண்டே யானை வந்ததால் […]

You May Like