fbpx

அதிகாலையில், நெடுஞ்சாலையில் குட்டியை ஈன்ற யானை: பிரசவத்தின் போது அரனாக நின்ற சக யானைகள்…! நெகிழ்ச்சி சம்பவம்..!

கேரள மாநிலம் இடுக்கி மாவட்டத்தில், மறையூர் அருகே செவ்வாய்க்கிழமை அதிகாலை நெடுஞ்சாலையின் நடுவே யானை ஒன்று தன் குட்டியை ஈன்றது. இதன் காரணமாக, தமிழ் நாடு மற்றும் கேரளாவை இணைக்கும் இடுக்கி மாவட்டத்தில் உள்ள மறையூர் வழியாக செல்லும் நெடுஞ்சாலையில் சுமார் ஒரு மணி நேரம் போக்குவரத்து தடைபட்டது.

கருவுற்றிருந்த யானை ஒன்று, பிரசவ வலி ஏற்பட்டதும், பிளிறலுடன் மரையூர் சாலைப் பகுதிகுகு வந்துள்ளது. பிளிறிக் கொண்டே யானை வந்ததால் வாகனங்களை ஓட்டு வந்தவர்கள் தொலைவிலேயே வாகனங்களை நிறுத்தி விட்டனர். இந்நிலையில் பிரசவ நேரம் நெருங்கியதால் நடுரோட்டிலேயே நிறைமாத யானை நடு ரோட்டிலேயே குட்டியை ஈன்றது இந்த சூழ்நிலையால் அந்தத் தாயானகி பாதுகாப்பாக யானை கூட்டம் ஒன்றாக கூடி சாலை மறித்து இருபுறமும் வாகனங்கள் செல்லாமல் தடுத்து நின்றன இதனால் அந்த தாய் யானை தன் குட்டியை மிகவும் பாதுகாப்பாக ஈன்றது.

புதிதாகப் பிறந்த குட்டியும் அதன் தாயும் மெதுவாக அருகிலுள்ள காட்டுக்குள் சென்ற பிறகு, அந்த யானை கூட்டம் அங்கிருந்து நகர்ந்தது காட்டுக்குள் சென்றது. இந்த அழகிய சம்பவத்தின் போது வாகன ஓட்டிகள் பொறுமையாக அமைதியுடன் காத்திருந்தனர். எந்த வண்டியும் அவசரம் காட்டவோ, ஒலி எழுப்பி யானை கூட்டத்தை கலைக்கவோ முயற்சிக்கவில்லை. இது பற்றி வனத்துறையினர் கூறுகையில், இது போன்ற சம்பவங்கள் வனப்பகுதி மற்றும் அதை சுற்றியுள்ள பகுதிகளில் அடிக்கடி நடக்கின்றன என்றனர்.

Baskar

Next Post

’விரைவில் மக்கள் பயன்பாட்டுக்கு வருகிறது மூலிகை பெட்ரோல்’..! ஒரு லிட்டர் ரூ.14 மட்டுமே..!

Thu Jul 7 , 2022
பல ஆண்டுகளாக கிடப்பில் இருந்த மூலிகை பெட்ரோல் விரைவில் மக்கள் பயன்பாட்டுக்கு வரும் என்று ராமர் பிள்ளை தெரிவித்துள்ளார். விருதுநகர் மாவட்டம் ராஜபாளையம் அருகே மம்சாபுரத்தைச் சேர்ந்தவர் ராமர் பிள்ளை. இவர் உலக வங்கி, ஐக்கிய நாடுகள் சபை, மத்திய அரசின் கூட்டு திட்டத்தில் மூலிகை பெட்ரோலை பதிவு செய்துள்ளார். கழிவு நீர் மூலமும், விவசாய கழிவுகளைக் கொண்டும் பயோ டீசல், பயோ பெட்ரோல், பயோ சமையல் எரிவாயு தயாரித்த […]
’விரைவில் மக்கள் பயன்பாட்டுக்கு வருகிறது மூலிகை பெட்ரோல்’..! ஒரு லிட்டர் ரூ.14 மட்டுமே..!

You May Like