fbpx

குழந்தைக்கு பால் கொடுக்கும் போது சரிந்து விழுந்து இறந்த பெண்.! கொலையா.? நாடகமாடிய கணவன், மாமியார் உட்பட 3 பேர் கைது.!

ஈரோடு மாவட்டத்தில் மனைவியை கொலை செய்து விட்டு நாடகமாடிய வழக்கில் கணவன் மாமனார் மற்றும் மாமியார் கைது செய்யப்பட்டிருக்கும் சம்பவம் அதிர்ச்சியையும் பரபரப்பையும் ஏற்படுத்தி இருக்கிறது.

ஈரோடு மாவட்டத்தை சேர்ந்தவர் பூரணி(28). இவர் பெங்களூரில் உள்ள மென்பொருள் நிறுவனம் ஒன்றில் பொறியாளராக பணியாற்றி வந்தார். இவருக்கும் ஈரோடு மாவட்டத்தை சேர்ந்த மதன் குமார் என்பவருக்கும் கடந்த ஆண்டு ஜூன் மாதம் திருமணம் நடைபெற்றது. மதன்குமார் கணினி பொறியாளர் என்பது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில் கர்ப்பமாக இருந்த பூரணி தனது மாமனார் வீட்டில் தங்கி இருக்கிறார். அவருக்கு கடந்த ஆகஸ்ட் மாதம் பெண் குழந்தை பிறந்திருக்கிறது.

இந்நிலையில் கடந்த அக்டோபர் மாதம் குழந்தைக்கு பால் கொடுத்து கொண்டிருந்தபோது தனது மனைவி மயங்கி விழுந்ததாக கூறி அவரை ஆம்புலன்ஸ் மூலம் மருத்துவமனையில் அனுமதித்திருக்கிறார் மதன்குமார். ஆனால் சிகிச்சை பலனின்றி பூரணி பரிதாபமாக உயிரிழந்தார். இதனைத் தொடர்ந்து மகளின் மரணத்தில் சந்தேகம் இருப்பதாக பூரணியின் தந்தை காவல் நிலையத்தில் புகார் தெரிவித்தார். இதனைத் தொடர்ந்து நடைபெற்ற பிரேத பரிசோதனையில் பூரணி கொலை செய்யப்பட்டது உறுதியானது. இந்நிலையில் அவரது கணவன் மதன் குமார், மாமனார் யுவராஜ் மற்றும் மாமியார் பூங்கொடி ஆகியோர் தலைமறைவாயினர்.

இது தொடர்பாக தலைமறைவான மூன்று பேரையும் காவல்துறை தீவிரமாக தேடி வந்தது. இந்நிலையில் ஒத்தை குதிரை பகுதியில் அவர்கள் பதுங்கி இருப்பதாக காவல்துறைக்கு தகவல் கிடைத்தது. இதனையடுத்து அங்கு சென்ற காவல் துறையினர் மூன்று பேரையும் கைது செய்தனர். நீதிமன்றத்தில் ஆஜர்ப்படுத்தப்பட்ட அவர்கள் மத்திய சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர்.

Next Post

உங்கள் வீட்டில் நாய் இருக்கா..? கொடூரமான நோய் தாக்கும் அபாயம்..!! மருத்துவர்கள் எச்சரிக்கை..!!

Thu Dec 14 , 2023
பருவமழைக் காலம் தொடங்கியுள்ள நிலையில், பாா்வோ வைரஸ் தொற்றால் பாதிக்கப்படும் நாய்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது. சென்னையில் தினசரி 200-க்கும் மேற்பட்ட நாய்கள், அத்தகைய பாதிப்புகளுடன் சிகிச்சைக்காக கால்நடை மருத்துவமனைகளுக்கும், மருந்தகங்களுக்கும் அழைத்து வரப்படுவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. கால்நடைகளிடத்திலும், குறிப்பாக நாய்களிடத்திலும் வேகமாகப் பரவக் கூடியது கெனைன் பாா்வோ வைரஸ் தொற்று. காற்றின் மூலமாக பரவும் இந்நோயானது விலங்குகளுக்கு மட்டுமே பாதிப்பை ஏற்படுத்தும். பாா்வோ வைரஸ் தொற்று ஏற்பட்ட நாய்கள் சோா்வுடன் […]

You May Like