நமது சமூகத்தில் பாலியல் சார்ந்த விஷயங்களை பொதுவெளியில் பேசுவது இன்னும் கூச்சப்படும் ஒன்றாகவே இருந்து வருகிறது. அதேவேளை, இன்றைய டிஜிட்டல் யுகத்தில் எந்த விவகாரம் என்றாலும் அதை சமூக வலைத்தளத்தில் ஷேர் செய்யும் பழக்கமும் உள்ளது. அப்படித்தான் இளம் பெண் ஒருவர் தனது தாய் குறித்து போட்ட பதிவு இணையத்தில் பரபரப்பை கிளப்பியுள்ளது.
பொதுவாக, தற்போதைய இளைய தலைமுறையினர் எங்கள் பிரைவசியில் தலையிடக் கூடாது என்ற தெளிவான வாதத்தை முன்வைத்து பேசும் நிலையில், இந்த பெண்ணோ தனது தாயின் பிரைவசியை ஊடுருவி சென்று அதை ட்விட்டரில் வெளிப்படுத்தியிருக்கிறார். ‘Nicola’ என்ற ட்விட்டர் வாசி தான் தனது ட்விட்டர் பதிவில், டியூரெக்ஸ் ஆணுறை டப்பா புகைப்படத்தின் பதிவை போட்டுள்ளார். எனது தயாரின் அலமாரியில் நானும் எனது அண்ணனும் பார்த்த போது இது கிடைத்தது என்று கூறி எமோஜிக்களை போட்டு இந்த பதிவை வெளியிட்டுள்ளார்.
இந்த ட்வீட் ஜூலை 7ஆம் தேதி பகிரப்பட்ட நிலையில், இதுவரை 36 லட்சம் பேர் இந்த பதிவை பார்த்துள்ளனர். ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் கமெட்ண்டுகள் செய்துள்ளனர். இந்த ட்வீட் கவனம் பெற்று வைரலாகும் நிலையில், அந்த பெண்ணை சிலர் விமர்சித்து கமெண்ட் போட்டு வருகின்றனர். நீங்கள் மகளாகவே இருந்தாலும் இது போன்று செய்வது எல்லை மீறும் நடவடிக்கை என்று ஒருவர் கமெண்ட் செய்துள்ளார்.
உங்கள் தாயின் தனிப்பட்ட விவகாரங்களில் நுழைவதே தவறு. அதை இப்படி புகைப்படம் எடுத்து ட்வீட் போடலாமா என்று ஒருவர் கேள்வி கேட்டுள்ளார். ஒரு யூசரோ உச்சகட்டமாக ‘உன்னை போன்ற குழந்தை வேண்டாம்’ என்று தான் தாய் இதை வைத்திருக்கிறார் என்று பதிவிட்டுள்ளார்.