fbpx

குரூப் 4 தேர்வு முடிவில் குளறுபடி..? டிஎன்பிஎஸ்சி தேர்வாணையம் வெளியிட்ட முக்கிய அறிவிப்பு..!!

தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் மூலம் அரசில் காலிப்பணியிடங்கள் நிரப்பப்பட்டு வருகிறது. அதன்படி, 397 கிராம நிர்வாக அலுவலர், 2,792 இளநிலை உதவியாளர், 34 வரித்தண்டலர், 509 நில அளவையர், 74 வரைவாளர், 1,901 தட்டச்சர், 784 சுருக்கெழுத்து தட்டச்சர் உள்பட குரூப் 4 பதவிகளில் வரும் 7, 301 பணியிடங்களுக்கு கடந்த ஆண்டு ஜூலை மாதம் 22ஆம் தேதி தேர்வு நடைபெற்றது. இத்தேர்வை எழுத 22 லட்சத்து 2 ஆயிரத்து 942 பேர் விண்ணப்பித்திருந்த நிலையில், 18 லட்சத்து 50 ஆயிரத்து 471 பேர் எழுதினார்கள். இந்த தேர்வுக்கான முடிவு நேற்று முன்தினம் வெளியான நிலையில், தேர்வு முடிவில் குளறுபடிகள் இருப்பதாக தேர்வர்கள் தெரிவித்தனர்.

‘Typing பிரிவில் ஒரு lower ஒரு higher வைத்திருந்து அதிக மதிப்பெண் பெற்று இருந்தாலும், இரண்டுமே higher வைத்து குறைந்த மதிப்பெண்கள் பெற்றவர்களை விட தர வரிசையில் பின் தங்கி தான் இருப்பார். இது தான் typing rank preference’ என அதிகாரிகள் விளக்கம் அளித்துள்ளனர். மேலும், குரூப் 4 மதிப்பெண் கணக்கீட்டு பணிகள் சாஃப்ட்வேர் மூலம் செய்யப்பட்டு, அதிகாரிகள் மூலமாக நேரடி சரிபார்ப்பும் செய்யப்பட்டுள்ளது. எவ்வித தவறும் நடந்து விடக்கூடாது என்பதற்காக தான் அதிக காலம் எடுத்துக் கொண்டு சரியான முறையில் மதிப்பெண்கள் வழங்கப்பட்டுள்ளது. எனவே, இந்த விவகாரத்தில் தவறு நடந்திருக்க வாய்ப்பே இல்லை. இதில் ஏதேனும் குளறுபடிகளோ அல்லது தவறோ நடந்திருப்பதாக தேர்வர்கள் கருதினால் உரிய ஆதாரங்களோடு grievance.tnpsc@tn.gov.in என்ற இ-மெயில் மூலமாக புகார் தெரிவிக்கலாம் என டிஎன்பிஎஸ்சி அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

Chella

Next Post

அமெரிக்காவை நடுங்க வைத்த புயல்..!! அதிகரிக்கும் பலி எண்ணிக்கை..!! பொதுமக்கள் பீதி..!!

Sun Mar 26 , 2023
அமெரிக்காவில் மிசிசிபி மாகாணத்தில் புயலுடன் கூடிய கனமழை பெய்தது. இதில் அங்குள்ள பல்வேறு நகரங்கள் வெள்ளக்கடாக காட்சி அளித்தன. ஏராளமான மின் கம்பங்கள் சரிந்து விழுந்ததால் மின்சார பாதிப்பு ஏற்பட்டுள்ளது. இதனால், பல நகரங்கள் இருளில் மூழ்கியது. மேலும் பல இடங்களில் மரங்கள் சரிந்து விழுந்து போக்குவரத்து பாதிக்கப்பட்டது. இதனை அடுத்து தயாராக இருந்த மீட்பு குழுவினர் விரைந்து செயல்பட்டு மீட்பு நடவடிக்கையில் ஈடுபட்டனர். அவர்கள் வெள்ளத்தில் சிக்கியிருந்த பொதுமக்களை […]

You May Like