fbpx

“கை சின்னத்தில் களமிறங்கும் கமல்ஹாசன்.?” Congress -ன் மாஸ்டர் பிளான்.!

2024 ஆம் வருட பாராளுமன்றத் தேர்தல் நெருங்கி வரும் வேளையில் கூட்டணி மற்றும் தொகுதி பங்கீடு குறித்த பேச்சு வார்த்தைகளில் அரசியல் கட்சிகள் தீவிரமாக ஈடுபட்டு வருகிறது . தமிழகத்தில் ஆளும் திமுக தனது கூட்டணி கட்சிகளான காங்கிரஸ் விடுதலை சிறுத்தைகள் கட்சி அதிமுக கம்யூனிஸ்ட் போன்ற கட்சிகளுடன் தொகுதி பங்கீடு குறித்து பேச்சுவார்த்தை நடத்தி வருகிறது.

இந்தப் பாராளுமன்றத் தேர்தலில் கமல்ஹாசனின் மக்கள் நீதி மையம் காங்கிரஸ்(congress) தலைமையிலான இந்தியா கூட்டணியில் இனிய இருப்பதாக செய்திகள் வெளியானது . மேலும் திராவிட முன்னேற்றக் கழகத்துடன் தொகுதி குறித்த பேச்சு வார்த்தைகளுக்கு தயாராக இருப்பதாகவும் செய்திகள் வெளிவந்தன. ஆனால் திராவிட முன்னேற்றக் கழகம் இதுவரை கமல்ஹாசன் உடன் தொகுதி பங்கீடு குறித்து பேச்சுவார்த்தை நடத்தியதாக தெரியவில்லை.

இந்நிலையில் கமல்ஹாசனை கை சின்னத்தில் போட்டியிட வைக்க முயற்சி நடைபெற்று வருவதாக செய்திகள் தெரிவிக்கிறது . மேலும் காங்கிரஸ் கட்சிக்கு ஒதுக்கப்படும் தொகுதிகளில் இரண்டு தொகுதிகளை கமல்ஹாசனுக்கு கொடுத்து அவரது கட்சியின் வேட்பாளர்களை கை சின்னத்தில் போட்டியிட வைக்க காங்கிரஸ் கட்சி முயற்சி செய்து வருவதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

சில மாதங்களுக்கு முன்பு ராகுல் காந்தியின் பாரத் ஜோதா யாத்திரையில் கலந்து கொண்ட கமல்ஹாசன் அவருடன் பேச்சு வார்த்தை நடத்தியதும் குறிப்பிடத்தக்கது. மேலும் மத்தியில் நடைபெறும் பாசிச அரசை வீழ்த்த இந்தியா கூட்டணியில் இணைய இருப்பதாகவும் அவர் தெரிவித்து இருந்தார். இந்நிலையில் அவரது கட்சியை கை சின்னத்தில் போட்டியிட வைக்க நடைபெறும் முயற்சிகள் அரசியல் களத்தில் முக்கியமான நகர்வாக பார்க்கப்படுகிறது.

Next Post

கழிவறையில் ஃப்ளஷ் செய்ய மறந்த ஊழியர்!... பணியில் சேர்ந்த முதல் நாளிலேயே பணிநீக்கம் செய்யப்பட்ட அவலம்!… வைரலாகும் பதிவு!

Sun Feb 18 , 2024
டெல்லியில் நிறுவனம் ஒன்றில் கழிவறை சென்றுவிட்டு ஃப்ளஷ் செய்ய மறந்துவிட்டதால் பணியில் சேர்ந்த முதல்நாளிலேயே ஊழியர் ஒருவர் பணிநீக்கம் செய்யப்பட்டுள்ளார். இது தொடர்பான பதிவு இணையதளத்தில் வைரலாகியுள்ளது. இதுதொடர்பாக அந்த நபர் Reddit பதிவில், திடீரென பணிநீக்கம் செய்யப்பட்டதற்கு வழிவகுத்த துரதிர்ஷ்டவசமான சம்பவம் குறித்து விவரித்துள்ளார். அதாவது, அந்த நபர் வேலையில் சேருவதற்கு முந்தயநாள் இரவில் அளவுக்கு அதிகமாக சாப்பிட்டதாகவும், மது அருந்தியதாகவும் இதனால் அவரது உடல் அசௌகரியம் ஏற்பட்டதாகவும் […]

You May Like