fbpx

இந்தியா கூட்டணியின் அடிதாங்கியா காங்கிரஸ்.? செயற்குழு கூட்டத்தில் அவசர ஆலோசனை.!

தலைநகர் டெல்லியில் அகில இந்திய காங்கிரஸ் கட்சியின் செயற்குழு கூட்டம் நடைபெற்றது. இதில் சோனியா காந்தி ராகுல் காந்தி பிரியங்கா காந்தி மற்றும் மல்லிகார்ஜுன கார்கே உள்ளிட்ட மூத்த தலைவர்களும் காங்கிரஸ் கட்சியின் செயற்குழு உறுப்பினர்களும் கலந்து கொண்டனர்.

கடந்த செவ்வாய்க்கிழமை நடைபெற்ற இந்தியா கூட்டணி கட்சிகளின் ஆலோசனைக் கூட்டத்தில் காங்கிரஸ் கட்சி கடும் தாக்குதலுக்கு உள்ளானது. இந்தியா கூட்டணியில் காங்கிரஸ் தான் மத்திய கட்சி என்றாலும் ஆம் ஆத்மி திரிணாமுல் காங்கிரஸ் மற்றும் ராஷ்டிர ஜனதா தளம் போன்ற கட்சிகள் காங்கிரஸ் கட்சியை ஒருவழியாக்கிவிட்டன.

ராகுல் அல்லது பிரியங்கா தான் பிரதமர் என்று பேசிக் கொண்டிருந்த காங்கிரஸ் வாய்களுக்கு இந்தியா கூட்டணி ஆலோசனைக் கூட்டத்தில் கிடைத்த பதிலடி அவர்களை பதற்றத்திற்குள்ளாகி இருக்கிறது. தங்கள் கூட்டணி கட்சிகளே தங்களை கட்டம் கட்டி அடிக்கும் சூழ்நிலைக்கு தள்ளப்பட்டிருக்கிறது காங்கிரஸ்.

இந்நிலையில் இந்தியா கூட்டணி பற்றிய ஆலோசனை செய்வதற்கும் தொகுதி பங்கீடு மற்றும் பிரதம வேட்பாளர் குறித்து முடிவு செய்வதற்கும் செயற்குழுவை கூட்டி இருக்கிறது. மேலும் கூட்டணி கட்சிகள் தங்களுக்கு ஒதுக்கும் சீட்டுகளை தான் வாங்கியாக வேண்டுமா.? இல்லை தங்களால் சீட்டுகளை நிர்ணயிக்க முடியுமா.? என்பது தொடர்பாகவும் ஆலோசனை செய்து வருகிறது.

Next Post

ரூ.200 கடன் வாங்கிய மாணவன்..!! திருப்பிக் கேட்டு அரை நிர்வாணப்படுத்திய நண்பன்..!! கொடூர சம்பவம்..!!

Thu Dec 21 , 2023
உத்தரப்பிரதேச மாநிலம் ஜான்சி மாவட்டத்தை சேர்ந்த 10ஆம் வகுப்பு மாணவர் தன்னுடன் படிக்கும் நண்பனிடம் ரூ.200 கடன் பெற்றுள்ளார். கடந்த திங்கட்கிழமை, அங்குள்ள ஒரு பூங்காவில் அந்த மாணவரும், அவரது நண்பரும் அமர்ந்திருந்தனர். அப்போது அங்கு காரில் வந்த ஒரு கும்பல் அவர்கள் இருவரையும் ஒரு காட்டுப் பகுதியில் ராணுவ வீரர்களின் பயிற்சியை பார்வையிடலாம் என கூறி அழைத்துச் சென்றுள்ளனர். ஆனால், பின்னர் தான் தெரியவந்தது. அது நண்பரின் கூட்டாளிகள் […]

You May Like