fbpx

நிறைவு பெற்ற நாடாளுமன்ற கூட்டத்தொடர்…! பிரதமர் மோடியுடன் காங்கிரஸ் தலைவர் சந்திப்பு…!

நாடாளுமன்ற கூட்டத்தொடர் நிறைவடைந்ததை தொடர்ந்து குடியரசுத் துணைத்தலைவர் ஜெகதீப் தன்கர் அவர்களை பிரதமர் மோடி நேரில் சந்தித்தார்.

நடப்பாண்டுக்கான முதல் கூட்டத்தொடரான நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடர் குடியரசு தலைவர் உரையுடன் கடந்த மாதம் 31-ம் தேதி தொடங்கியது. இதனையடுத்து நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத் தொடரின் இரண்டாம் நாளான கடந்த 1-ம் தேதி 2024 – 2025 ஆம் ஆண்டிற்கான இடைக்கால பட்ஜெட்டை மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தாக்கல் செய்தார்.

இதன்பின் நாடாளுமன்றத்தில் மக்களவை மற்றும் மாநிலங்களவையில் பட்ஜெட் மீதான விவாதம் நடைபெற்று வந்த நிலையில், நேற்று வரை கூட்டத்தொடர் நேற்று நிறைவடைந்தது. இந்த பட்ஜெட் கூட்டத்தொடரில் பல்வேறு மசோதாக்கள் தாக்கல் செய்யப்பட்டது. பிரதமர் மோடி குடியரசு தலைவர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானம் மீது உரையாற்றினார். நேற்று அயோத்தி ராமர் கோயில் பற்றிய விவாதத்தை மத்திய அரசு நடத்தியது. பிரதமர் மோடி உரையுடன் நேற்று நாடாளுமன்ற கூட்டு தொடர் நிறைவு பெற்றது.

நாடாளுமன்ற கூட்டத்தொடர் நிறைவடைந்ததை தொடர்ந்து குடியரசுத் துணைத்தலைவர் ஜெகதீப் தன்கர் அவர்களை பிரதமர் மோடி நேரில் சந்தித்தார். இச்சந்திபில் மாநிலங்களவை எதிர்க்கட்சித் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே, மத்திய அமைச்சர் பியூஷ் கோயல் உள்ளிட்டோர் உடன் இருந்தனர்.

Vignesh

Next Post

உதயநிதிக்கு பாட்னா நீதிமன்றம் சம்மன்... நாளை மறுநாள் நேரில் ஆஜராக உத்தரவு...!

Sun Feb 11 , 2024
நாளை மறுநாள் பாட்னா நீதிமன்றத்தில் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் நேரில் ஆஜராக சமன் அனுப்பப்பட்டுள்ளது. கடந்த ஆண்டு சனாதன ஒழிப்பு மாநாட்டில் கலந்து கொண்டு சனாதனம் குறித்து பேசிய தமிழக விளையாட்டுத் துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் டெங்கு , கொரோனா போன்று அதை தர்மத்தை ஒழிக்க வேண்டும் என பேசியது இன்று வரை சர்ச்சைக்கு உள்ளாகி வருகிறது. அவரது அந்த கருத்திற்கு நாடு முழுவதும் பல்வேறு இடங்களில் வழக்கு […]

You May Like