கடந்த சில மாதங்களுக்கு முன்னர் ராகுல் காந்தி ஒற்றுமை பயணம் என்று சொல்லி, காஷ்மீர் முதல் கன்னியாகுமரி வரையில், நடை பயணத்தை மேற்கொண்டார்.
அந்த நடை பயணம் சமீபத்தில் முடிவுற்ற நிலையில், தற்போது மீண்டும் ராகுல் காந்தியின் 2வது ஒற்றுமை பயணம் விரைவில் தொடங்க இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதற்கு முன்பாக, கன்னியாகுமரியில் கடந்த வருடம் செப்டம்பர் மாதம் 7ம் தேதி ஆரம்பமான ராகுல் காந்தியின் முதல் ஒற்றுமை நடைப்பயணம், நூறு நாட்கள் நடைபெற்றது. இதில், சுமார் 4000 கிலோமீட்டர் தாண்டி காஷ்மீர் மாநிலத்தில் முடிவுற்றது.
இதனை அடுத்து, தற்சமயம் நாட்டின் குறுக்கு வெட்டு மாநிலங்களில், ராகுல் காந்தி நடைபயணம் மேற்கொள்ள திட்டமிட்டு, இருப்பதாக தெரிகிறது. மகாராஷ்டிரா, மாநிலத்தில் காங்கிரஸ் கட்சியின் தலைவர் நானா படோல் பத்திரிகையாளர்களை இன்று சந்தித்தார். அப்பொழுது பேசிய அவர், இந்த தகவலை உறுதி செய்திருக்கிறார்.
ராகுல் காந்தியின் ஒற்றுமை நடைப்பயணத்தின் 2வது அத்தியாயம் குஜராத் மாநிலத்தில் இருந்து, ஆரம்பமாக உள்ளது. காங்கிரஸ் கட்சியின் பல்வேறு தலைவர்கள் தொடங்கும் இந்தப் பயணம் மேகாலயாவின் நிறைவு பெறும் என்று குறிப்பிட்டுள்ளார்.