fbpx

“புதுசு கண்ணா புதுசு”! தலைநகர் டெல்லியில் அதானிக்கு எதிரான புது முறையில் ஆர்ப்பாட்டம்!

அதானி விவகாரம் தொடர்பாக நாடெங்கிலும் சர்ச்சைகள் நடைபெற்று வரும் சூழ்நிலையில் காங்கிரஸ் கட்சியின் சார்பாக தலைநகர் டெல்லியில் இன்று மிகப்பெரிய ஆர்ப்பாட்டம் ஒன்று நடைபெற்றது. இந்த ஆர்ப்பாட்டத்தில் திரளான காங்கிரஸ் கமிட்டியின் உறுப்பினர்கள் கலந்து கொண்டனர். சமீபத்தில் பிபிசி நிறுவனத்தால் வெளியிடப்பட்ட ஆவணங்கள் மற்றும் காணொளி காட்சிகள் மூலம் அதானி குழுமம் செய்துள்ள மிகப்பெரிய மோசடி வெளிச்சத்திற்கு வந்தது. இதனைத் தொடர்ந்து அந்த மோசடியை விசாரிக்க நாடாளுமன்ற கூட்டுக்குழு அமைக்க வேண்டும் என காங்கிரஸ் மற்றும் எதிர்க்கட்சி உறுப்பினர்கள் கோரிக்கையை வலியுறுத்தி நேற்று பாராளுமன்றத்தில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் நேற்று பாராளுமன்ற சாலையில் தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டிருந்தது.

இந்நிலையில் காங்கிரஸ் கட்சியின் சார்பாக அதானி குடும்பத்திற்கு எதிராக கூட்டு நாடாளுமன்ற குழு அமைத்து விசாரணை செய்யப்பட வேண்டும் என்ற கோரிக்கையை வலியுறுத்தி தலைநகர் டெல்லியில் மிகப்பெரிய ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இந்த ஆர்ப்பாட்டத்தில் திரளான காங்கிரஸ் கட்சியினர் கலந்து கொண்டனர். இந்தப் போராட்டத்தில் புது மாப்பிள்ளை போல ஆடை மேலும் பண மாலை அணிந்து ஒருவர் காவல்துறை அமைத்திருந்த பேரிகேட்களை தாண்டி செல்ல முயன்ற வீடியோ காட்சி ஒன்று தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. பிபிசி செய்தி நிறுவனத்தின் ஆவணங்கள் வெளியான நாளிலிருந்து இந்த சம்பவம் தொடர்பாக காங்கிரஸ் கட்சியினர் தொடர் போராட்டங்களை நடத்தி வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Rupa

Next Post

கடவுள் கிருஷ்ணரை திருமணம் செய்து கொண்ட பெண்..!! மகளின் முடிவுக்கு பச்சைக்கொடி காட்டிய பெற்றோர்..!!

Thu Mar 16 , 2023
ஒருதார மணம், பலதார மணம் மற்றும் தன்னைத்தானே திருமணம் செய்துக்கொள்வது என பல முறைகள் உலகில் நடைமுறையில் இருந்து வரும் நிலையில், 30 வயதான பெண் ஒருவர் இந்துக்களின் கடவுளாக கருதப்படும் கிருஷ்ணனின் சிலைக்கு மாலை மாற்றி திருமணம் செய்துக் கொண்டுள்ளார். இதனை அப்பெண்ணின் பெற்றோர்களே முன்னின்று நடத்தியும் வைத்துள்ளனர். இந்த நிகழ்வு உத்தரப்பிரதேசத்தில் உள்ள ஆவ்ரியாவில் நடந்திருக்கிறது. குறிப்பாக சாதாரணமாக நடக்கும் திருமணத்தில் இடம்பெறும் இசைக்கச்சேரிகளும் இந்த திருமணத்தில் […]

You May Like