ராஜீவ்காந்தி படுகொலை செய்யப்பட்ட வழக்கில் இருந்து விடுதலை செய்யப்பட்ட நளினி உள்ளிட்ட 6 பேர் விடுதலையை எதிர்த்து காங்கிரஸ் மறு ஆய்வு மனுத்தாக்கல் செய்ய உள்ளது.
ராஜீவ்காந்தி படுகொலையான வழக்கில் தொடர்புடையதாக குற்றம்சாட்டப்பட்டு கைதானவர்களில் நளினி,முருகன்,சாந்தன், ரவிச்சந்திரன், ராபர்ட்பயஸ் உள்ளிட்ட 6 பேர் கடந்த 11ம் தேதி விடுவிக்கப்பட்டனர். படுகொலை வழக்கில் 7 பேருக்கு மரணதண்டனை விதிக்கப்பட்டு பின்னர் ஆயுள் தண்டனையாக குறைக்கப்பட்டது. நன்னடத்தை காரணமாக பேரறிவாளன் கடந்த மே மாதம் உச்சநீதிமன்றத்தால் விடுதலை செய்யப்பட்டார்.
சட்டப்பிரிவு 142ன் கீழ் உச்சநீதிமன்றம் தனக்கு இருக்கும் சிறப்பு அதிகாரத்தை பயன்படுத்தி பேரறிவாளனை விடுவித்தது. பேரறிவாளன் விடுவிக்கப்பட்ட அதே முறையில், நளினி, முருகன் உள்ளிட்டவர்களும் விடுதலை செய்யப்பட்டனர். இதையடுத்து மத்திய அரசு இந்த விடுதலைக்கு எதிராக கடந்த வெள்ளிக்கிழமை மறு சீராய்வுமனுத்தக்கல் செய்தனர்.
இந்நிலையில் காங்கிஸ் கட்சியும் மறு சீராய்வு மனுத்தாக்கல் செய்ய உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொலை வழக்கில் மத்திய அரசு மறு சீராய்வு மனு தாக்கல் செய்துள்ள நிலையில் காங்கிரஸ் கட்சியினரிடம் இருந்து அழுத்தத்தின் காரணமாக மறு சீராய்வு மனுத்தாக்கல் செய்தது. இந்நிலையில் தற்போது காங்கிரஸ் கட்சியும் தனியாக மறு சீராய்வு மனுத்தாக்கல் செய்ய திட்டமிட்டிருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது. எனவே அடுத்த சில நாட்களில் நீதிமன்றத்தில் மறு சீராய்வு மனுத்தாக்கலாகும் என எதிர்பார்க்கப்படுகின்றது.