fbpx

ELECTION 2024 | திமுக – காங் தொகுதி உடன்பாடு.! 10 தொகுதிகளில் களமிறங்கும் காங்கிரஸ் அதிகாரப்பூர்வ அறிவிப்பு.!

2024 ஆம் வருட பாராளுமன்ற தேர்தலுக்கான கூட்டணி மற்றும் தொகுதி பங்கீடு தொடர்பான பேச்சுவார்த்தையில் அரசியல் கட்சிகள் தீவிரம் காட்டி வருகிறது தமிழகத்தில் திமுக தலைமையில் காங்கிரஸ் விசிக மதிமுக மனிதநேய மக்கள் கட்சி கம்யூனிஸ்ட் உள்ளிட்ட கட்சிகள் இணைந்து இந்தியா கூட்டணியில் போட்டியிட இருக்கிறது.

இதில் பெரும்பாலான கட்சிகளுடன் திமுகவிற்கு தொகுதி பங்கீடு ஏற்பட்டிருக்கிறது. மேலும் கூட்டணி கட்சிகளுக்கும் பேச்சுவார்த்தையின் அடிப்படையில் தொகுதிகள் வழங்கப்பட்டுள்ளது. இந்நிலையில் காங்கிரஸ் கட்சி மற்றும் திமுக தேர்தல் குழு தொகுதி பங்கீடு தொடர்பாக இன்று பேச்சு வார்த்தை நடத்தி வருகிறது.

இதற்காக காங்கிரஸ் கட்சியின் நிர்வாகிகள் திமுக தேர்தல் குழுவுடன் அண்ணா அறிவாலயத்தில் தொகுதி பங்கீடு தொடர்பாக ஆலோசனை செய்து வருகின்றனர். இரண்டு கட்சிகளுக்கும் இடையேயான கூட்டணி உறுதியான நிலையில் விரைவிலேயே காங்கிரஸ் கட்சி போட்டியிடும் தொகுதிகள் அறிவிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. மேலும் திமுக தலைமையுடன் காங்கிரஸ் கூட்டணியை இறுதி செய்துள்ளது.

இந்த தொகுதி பங்கீடு குறித்த பேச்சு வார்த்தையில் காங்கிரஸ் கட்சி 14 தொகுதிகள் கேட்ட நிலையில் திமுக காங்கிரஸ் கட்சிக்கு தமிழகத்தில் ஒன்பது தொகுதிகளும் பாண்டிச்சேரியில் ஒரு தொகுதி என மொத்தம் 10 தொகுதிகள் வழங்கி இருக்கிறது. இதனைத் தொடர்ந்து திமுக மற்றும் காங்கிரஸ் கட்சிகளுக்கு இடையே கூட்டணி ஒப்பந்தம் கையெழுத்தானது.

Next Post

"போதை பொருட்களை விற்று தேர்தலை சந்திக்கும் திமுக" - BJP துணைத் தலைவர் பகிரங்க குற்றச்சாட்டு.!

Sat Mar 9 , 2024
திமுக போதை பொருட்களை கடத்துவதற்காகவே அயலக அணி என்ற ஒன்றை உருவாக்கி இருப்பதாக பாஜகவின் மாநிலத் துணைத் தலைவர் ராமலிங்கம் பரபரப்பான குற்றச்சாட்டை முன் வைத்திருக்கிறார். நாமக்கல் மாவட்டம் ராசிபுரத்தில் பாரதிய ஜனதா கட்சியின் சார்பாக மக்களின் கருத்து கேட்பு மனுக்கள் பெறும் நிகழ்ச்சி நடைபெற்றது. இந்த நிகழ்ச்சி வளர்ச்சி வளர்ச்சி வளர்ச்சி அடைந்த பாரதம் மோடியின் உத்திரவாதம் என்ற தலைப்பில் நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்ட பாரதிய […]

You May Like