fbpx

திடீர் திருப்பம்..! ஈரோடு இடைத்தேர்தலில் காங்கிரஸ் போட்டியிடாது…! செல்வப் பெருந்தகை அறிவிப்பு…!

ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் திமுகவே போட்டியிடும் என காங்கிரஸ் கட்சி சார்பில் அறிவிக்கப்பட்டுள்ளது.

இது குறித்து காங்கிரஸ் கட்சியின் மாநில தலைவர் செல்வப் பெருந்தகை வெளியிட்டுள்ள அறிக்கையில்; ஈரோடு கிழக்கு தொகுதிக்கு வருகின்ற பிப்ரவரி 5-ம் தேதி இடைத் தேர்தல் வரவிருப்பதை நாம் அனைவரும் அறிவோம். இந்த தொகுதியில் காங்கிரஸ் சட்டமன்ற உறுப்பினர் இளங்கோவன் மறைவு அடைந்ததையோட்டி இடைத் தேர்தல் வரவிருக்கிறது.

2026 சட்டமன்ற பொது தேர்தலுக்கு இன்னும் 10 மாதங்களே உள்ள நிலையில், முதலமைச்சர் மற்றும் இண்டியா கூட்டணியின் தமிழ்நாட்டின் தலைவராக விளங்கி கொண்டிருக்கும் மு.க.ஸ்டாலின், முதல் முறையாக கேட்டுக்கொண்டதற்கு இணங்க அகில இந்திய காங்கிரஸ் தலைமை மற்றும் தமிழ்நாடு காங்கிரஸ் தலைமையின் தீவிர ஆலோசனைக்கு பிறகு நாங்கள் அனைவரும் ஒரு மனதாக ஏற்றுக்கொண்டு இந்திய கூட்டணியின் சார்பாக ஈரோடு கிழக்கு தொகுதியின் இடைத் தேர்தலில் திராவிட முன்னேற்ற கழகத்தின் வேட்பாளர் போட்டியிடுவார் என்று உறுதிசெய்யப்பட்டது.

இந்திய அரசியலமைப்பு சட்டத்தை பாதுகாக்க நாட்டில் ஜனநாயகம் மலரச் செய்ய நாம் அனைவரும் ஒன்றினைந்து இந்திய கூட்டணியின் திராவிட முன்னேற்றக் கழகத்தின் வேட்பாளரை பெருவாரியான வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெறச் செய்வோம் என தெரிவித்துள்ளார்.

English Summary

Congress will not contest in Erode by-election…! Selva Peruthagai announcement

Vignesh

Next Post

வெறும் வயிற்றில் இந்த தண்ணீர் குடிங்க; நீங்க ஆசைப்படுற மாதிரி ஸ்லிம்மா இருக்கலாம்..

Sat Jan 11 , 2025
easy tips to reduce weight and maintain fitness

You May Like