சென்னை செம்பியம் காவல்நிலைய எல்லைக்கு உட்பட்ட பகுதியைச் சார்ந்த 30 வயது மதிக்கத்தக்க பெண்மணி வருவார் நிலப்பிரச்சனையின் காரணமாக, புகார் வழங்குவதற்காக செந்தியும் காவல் நிலையத்திற்கு சென்றுள்ளார். அப்போது பணியில் இருந்த முதல் நிலை காவலர் வினோத்குமார் (32) என்பவர் புகார் தொடர்பாக விசாரித்து அந்த பெண்ணிடம் அவருடைய கைபேசி எண்ணையும் வாங்கிக் கொண்டார்.
பின்னர் காவலர் வினோத்குமார் தவறான நோக்கத்துடன் அந்த பெண்ணுக்கு குறுந்தகவல்களை அனுப்பி இருக்கின்றார். மேலும் அந்த பெண்ணின் வீடு தேடியும் சென்றுள்ளார், அப்போது தகராறு ஏற்பட்டிருக்கிறது. இதனால் அதிர்ச்சியில் உறைந்த அந்த பெண்ணின் குடும்பத்தினர் இது தொடர்பாக செம்பியம் காவல் நிலையத்தில் புகார் வழங்கினர்.
இது தொடர்பாக சரியான விசாரணை நடத்த வேண்டும் என்று போதும் காவல்துறை அதிகாரிகள் உத்தரவு பிரப்பித்தனர். இந்த நிலையில் வினோத்குமாரை பணியிடை நீக்கம் செய்து சென்னை காவல்துறை ஆணையர் சங்கர் ஜிவால் உத்தரவு பிறப்பித்திருக்கிறார்