அரியலூர் மாவட்டத்தில் கள்ளக்காதல் விவகாரம் தொடர்பாக கட்டிட தொழிலாளி கொலை செய்யப்பட்ட சம்பவம் அதிர்ச்சியையும் பதட்டத்தையும் ஏற்படுத்தியிருக்கிறது. இது தொடர்பாக வழக்கு பதிவு செய்துள்ள காவல் துறையினர் கட்டிட தொழிலாளியின் நண்பரை பிடித்து விசாரித்ததில் பல திடுக்கிடும் அதிர்ச்சி சம்பவங்கள் வெளியாகி இருக்கின்றன.
அரியலூர் மாவட்டம் நாகப்பந்தல் பகுதியைச் சேர்ந்தவர் ராஜமுருகன். இவர் கட்டிட தொழிலாளியாக வேலை பார்த்து வந்தார். இவரது மனைவி ராஜகுமாரி. இந்நிலையில் ராஜமுருகன் போலிப்பாளையம் பகுதியில் நடந்து சென்று கொண்டிருந்தபோது அவரது நண்பரான ராஜசிங்கம் என்பவர் ராஜமுருகனின் தலையில் சுத்தியலால் பலமாக தாக்கி கொலை செய்து விட்டு தப்பி ஓடி இருக்கிறார்.
இது தொடர்பாக பொதுமக்கள் அளித்த தகவலின் பேரில் சம்பவ இடத்திற்கு வந்த காவல்துறையினர் இருந்த ராஜமுருகனின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். மேலும் இந்த கொலை சம்பவம் தொடர்பாக தப்பியோடிய ராஜ சிங்கத்தை கைது செய்தனர். அவரிடம் நடத்தப்பட்ட விசாரணையில் கள்ளக்காதல் தொடர்பாக இந்த கொலை சம்பவம் நடந்தது தெரிய வந்திருக்கிறது.
ராஜசிங்கத்திற்கும் ராஜமுருகனின் மனைவிக்கும் இடையே கள்ளத்தொடர்பு இருந்துள்ளது. இது தொடர்பாக ராஜூ முருகன் தனது மனைவி மற்றும் நண்பனை கண்டித்து இருக்கிறார். இது நான் ஆத்திரமடைந்த ராஜ சிங்கம் தனது நண்பன் ராஜமுருகனை சுத்தியலால் அடித்து கொலை செய்திருக்கிறார். இந்த சம்பவத்தால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.