fbpx

நுகர்வோர் கவனத்திற்கு..! இன்றே கடைசி நாள்…. மின் இணைப்புடன் ஆதார் எண் இணைப்பு…

தமிழ்நாடு முழுவதும் மின் இணைப்புடன் ஆதார் எண்ணை இணைக்க வேண்டும் என்று கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் மின்சாரத்துறை அறிவித்தது. அதன்படி மின் இணைப்புடன் ஆதார் எண்ணை இணைக்க சிறப்பு முகாம்களும் தமிழக அரசால் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. மேலும் மின் நுகர்வோர்கள் மின் வாரிய இணையதளத்தை பயன்படுத்தியும் ஆதார் எண்ணை இணைத்து வருகின்றனர். அரசின் மானியங்களை முறைப்படுத்துவதற்காக தான் இந்த செயல்பாடு மேற்கொள்ளப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

மின் இணைப்புடன் ஆதார் எண்ணை இணைக்க இன்றுடன் (ஜனவரி 31) காலஅவகாசம் முடிவடையும் நிலையில்,தமிழகத்தில் உள்ள 2.67 கோடி நுகர்வோரில் இதுவரை 2.34 கோடி பேர் மின் இணைப்புடன் ஆதார் எண்ணை இணைத்துள்ளதாக அமைச்சர் செந்தில் பாலாஜி நேற்றைய தினம் பதிவிட்டுள்ளார். மின் இணைப்புடன் ஆதார் எண்ணை இணைக்க முதலில் கடந்த ஆண்டு டிசம்பர் 31-ம் கடைசி நாள் என்று அறிவிக்கப்பட்டது. இதனைத் தொடர்ந்து இதற்கான கால அவகாசம் ஜனவரி 31ம் தேதி வரை நீட்டிக்கப்படுவதாக மின்சார துறை அமைச்சர் செந்தில்பாலாஜி அறிவித்தார்.

அதன்படி இன்றுடன் கால அவகாசம் முடிவடையும் நிலையில், இந்த அவகாசம் நீட்டிக்கப்படுமா என்று இன்னும் எந்த அறிவிப்பும் வேகியாகவில்லை. இதுவரை ஆதார் எண்ணை இனித்திடாதவர்கள் விரைந்து இணைக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். மேலும் மின் இணைப்புடன் ஆதார் எண் இணைத்துவிட்டதா என்று சரிப்பார்க்க https://www.tnebltd.gov.in/BillStatus/billstatus.xhtml என்ற இணையதளத்தில் தங்களது மின் இணைப்பு எண் மற்றும் மொபைல் எண்ணை அளித்து சரிபார்த்து கொள்ளலாம்

Kathir

Next Post

பலத்த எதிர்பார்ப்பில் மத்திய பட்ஜெட்..!! வருமான வரி விலக்கு..!! நிச்சயம் இந்த அறிவிப்பு இருக்காம்..!!

Tue Jan 31 , 2023
மத்திய அரசின் பட்ஜெட் கூட்டத்தொடர் இன்று தொடங்கவுள்ள நிலையில், மக்களவை மற்றும் மாநிலங்களவை கூட்டுக் கூட்டத்தில் குடியரசுத் தலைவர் திரவுபதி முர்மு முதல் முறையாக உரையாற்றுகிறார். இந்த உரைக்குப் பிறகு, பொருளாதார ஆய்வறிக்கை நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்யப்படும். 2023-24ஆம் நிதியாண்டுக்கான நிதிநிலை அறிக்கையை (பட்ஜெட்) மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் மக்களவையில் நாளை தாக்கல் செய்ய உள்ளார். அடுத்த ஆண்டில் மக்களவைத் தேர்தல் நடைபெறவுள்ள சூழ்நிலையில் பிரதமர் மோடி தலைமையிலான […]

You May Like