fbpx

சர்ச்சையான மொழிக் கொள்கை!… கேள்வி கேட்ட நபரை மிரட்டிய அமைச்சர்!… அண்ணாமலை கண்டனம்!

மொழிக் கொள்கை தொடர்பாக முதியவர் ஒருவருடன் அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் வாக்குவாதத்தில் ஈடுபட்ட நிலையில், அதுதொடர்பாக அண்ணாமலை ட்விட்டர் பக்கத்தில் கண்டனம் தெரிவித்துள்ளார்.

கடந்த சில நாட்களுக்கு முன்பு அயலக தமிழர்கள் விழா சென்னையில் கொண்டாடப்பட்டது. அப்போது கேள்வி – பதில் வடிவில் அமைச்சர் பிடிஆர் அரங்கில் இருந்தவர்களிடம் உரையாடினார். அப்போது எழுந்த நபர் ஒருவர், “எட்டுத்திக்கும் தமிழர்கள் செல்ல வேண்டும் என்றால் நாம் எல்லா மொழிகளையும் படிக்க வேண்டும். இந்தியை திணிக்கிறார்கள், சமஸ்கிருதத்தை திணிக்கிறார்கள் என்பதை விட்டுவிட்டு தமிழர்களுக்கு ஜெர்மனி, ஸ்பானிஷ் என மொழிகளையும் பயிற்றுவிக்க வேண்டும். பல மொழிகளை பயிற்றுவிக்கும் சிபிஎஸ்இ பாடத் திட்டத்தை தமிழக அரசு ஏன் தடுக்கிறது?” என்று கேள்வி எழுப்பினார்.

அதற்கு அமைச்சர் பழனிவேல் தியாகராஜன், சிபிஎஸ்இ பாடத் திட்டத்தை யார் தடுப்பது, சிபிஎஸ்இ பாடத்திட்டத்தை மத்திய கல்வி வாரியம் அமல்படுத்துகிறது. தமிழகத்தில் எந்த கட்சி ஆட்சியில் இருந்தாலும் சிபிஎஸ்இ தனது கல்வியை வழங்கி வருகிறது. அதேபோல தமிழக அரசுக்கு என தனி கல்வி கொள்கை இருப்பதாகவும் சுட்டிக்காட்டினார். அப்போது அவரை வெளியேற்ற முயற்சி நடந்ததாக கூறப்படும் நிலையில், இது ஜனநாயகமல்ல என்று அவர் வாதிட்டார். மேலும், தனது பெயர் கருணாநிதி என்றும் தானும் திராவிடத்தைச் சேர்ந்தவன்தான் என்றும் குறிப்பிட்டார். எங்கு வசிக்கிறீர்கள் என அமைச்சர் கேட்டதற்கு அதற்கு பதில் கூறாமல் நான் குளோபல் சிட்டிசன் எனக் கூறி வாக்குவாதம் செய்தார். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.

இந்த வீடியோவை தனது எக்ஸ் தளத்தில் பகிர்ந்த பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை, “மூத்தவரான கருணாநிதி மும்மொழிக் கொள்கையை அமல்படுத்துவதற்கு தமிழக அரசு ஏன் எதிராக உள்ளது என திமுக அமைச்சர் பிடிஆரைப் பார்த்து கேள்வி கேட்கிறார். அரசுப் பள்ளிகளில் படிக்கும் குழந்தைகள் மூன்றாம் மொழி கற்கும் வாய்ப்பை தடை செய்த தமிழக அரசின் தவறான கொள்கைகளை அம்பலப்படுத்தினார் என்பதற்காக அவருக்கு பதில் கூறுவதற்கு பதிலாக அமைச்சரால் மிரட்டப்பட்டு அரங்கைவிட்டு வெளியேற்றப்பட்டார்” என்று குற்றம் சாட்டியுள்ளார். இந்த விவகாரம் அரசியல் அரங்கில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Kokila

Next Post

கிளாம்பாக்கம்.. ஜனவரி 24 முதல் தென் மாவட்டங்களுக்கு ஆம்னிப் பேருந்துகள் முதல் இயக்க திட்டம்...!

Sun Jan 14 , 2024
அரசு தலைமைச் செயலாளர் அவர்கள் “கலைஞர் நூற்றாண்டு பேருந்து முனையத்தில் ” அரசு போக்குவரத்துக் கழக பேருந்துகள் இயக்கப்படுவது (ம) பயணிகளுக்கு தேவையான கூடுதல் வசதிகள் குறித்தும் பல்வேறு துறைகளைச் சார்ந்த உயர் அலுவலர்களுடன் ஆலோசனைக் கூட்டம் நடத்தினார். கூட்டத்திற்கு பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர்; பொங்கல் பண்டிகையை முன்னிட்டு கிளாம்பாக்கம் “கலைஞர் நூற்றாண்டு பேருந்து முனையத்திலிருந்து” தென்மாவட்டங்களுக்கு சிறப்பு பேருந்துகள் இயக்கப்பட்டு வருகிறது. இப்பேருந்து முனையம் திறக்கப்பட்ட நாளிலிருந்து […]

You May Like