fbpx

பரபரப்பு…! குட்கா முறைகேடு வழக்கில் முன்னாள் அமைச்சர் உட்பட 24 பேருக்கு குற்றப்பத்திரிகை நகல்…!

குட்கா முறைகேடு வழக்கில் அதிமுக முன்னாள் அமைச்சர்கள் பி.வி.ரமணா, சி.விஜயபாஸ்கர், முன்னாள் ஆணையர் ஜார்ஜ் உள்பட 24 பேருக்கு குற்றப்பத்திரிகை நகல் வழங்கியது சிறப்பு நீதிமன்றம்.

தமிழகத்தில் அதிகாரிகளுக்கும், அரசியல் பிரமுகர்களுக்கும் லஞ்சம் கொடுத்து தடையை மீறி சட்டவிரோதமாக குட்கா விற்கப்பட்டது தொடர்பாக டெல்லி சிபிஐ அதிகாரிகள் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர். இந்த வழக்கில் அதிமுக முன்னா்ள் அமைச்சர்கள் டாக்டர் சி. விஜயபாஸ்கர், பி.வி.ரமணா என்ற பி. வெங்கடரமணா, ஓய்வு பெற்ற தமிழக டிஜிபி டி.கே.ராஜேந்திரன், சென்னை மாநகர காவல்துறை முன்னாள் ஆணையர் எஸ்.ஜார்ஜ், வணிக வரித்துறை இணை ஆணையராக பதவி வகித்த வி.எஸ்.குறிஞ்சிச்செல்வன், வணிக வரித்துறை கூடுதல் தலைமைச் செயலாளராக பதவி வகித்த எஸ்.கணேசன், சுகாதாரத் துறை அதிகாரிகளான டாக்டர். லட்சுமி நாராயணன், காவல்துறை உதவி ஆணையராக பதவி வகித்த ஆர். மன்னர் மன்னன், காவல் ஆய்வாளராக பதவி வகித்த வி.சம்பத், சென்னை மாநகராட்சி முன்னாள் கவுன்சிலர் ஏ.பழனி உள்ளிட்டோருக்கு எதிராக கூடுதல் குற்றபத்திரிகை தாக்கல் செய்யப்பட்டது.

இந்த நிலையில் குட்கா முறைகேடு வழக்கில் அதிமுக முன்னாள் அமைச்சர்கள் பி.வி.ரமணா, சி.விஜயபாஸ்கர், முன்னாள் ஆணையர் ஜார்ஜ் உள்பட 24 பேருக்கு குற்றப்பத்திரிகை நகல் வழங்கியது சிறப்பு நீதிமன்றம். அதிமுக ஆட்சியின்போது தடையை மீறி அதிகாரிகளுக்கு லஞ்சம் கொடுத்து குட்கா விற்பனை செய்ததாக சிபிஐ வழக்கு.ஏற்கனவே 2020ம் ஆண்டு தாக்கல் செய்த குற்றப்பத்திரிகையில் மாதவ ராவ், உமா சங்கர் குப்தா உள்ளிட்ட 6 பேர் மீது குற்றப்பத்திரிகை சிபிஐ தாக்கல் செய்தது. தற்போது கூடுதல் குற்றப்பத்திரிகையில் மத்திய, மாநில அரசு அதிகாரிகள் உள்ளிட்ட 21 பேர் மீது குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

English Summary

Copy of chargesheet filed against 24 people including former minister in gutka case

Vignesh

Next Post

தூள்...! பால் உற்பத்தியாளர் குழந்தைகளுக்கு கல்வி உதவித்தொகை ரூ.50,000 ஆக உயர்வு...!

Tue Mar 11 , 2025
Educational scholarship for children of dairy farmers increased to Rs. 50,000

You May Like