fbpx

கொரோனா!… வாசனை நுகரும் திறனை மீட்டெடுப்பதில் சிக்கல்!… ஆய்வில் அதிர்ச்சி தகவல்!

இங்கிலாந்தில் கொரோனாவால் பாதித்த 5 பேரில் ஒருவருக்கு வாசனை நுகரும் திறன் குறைந்திருப்பதாகவும், 20 பேரில் ஒருவருக்கு முற்றிலுமாக வாசனை நுகரும் திறன் போய்விட்டதாகவும் ஆய்வு முடிவுகள் தெரிவிக்கின்றன.

கொரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டவர் வாசனை திறன் இழப்பார் என்பது ஆரம்ப கட்டத்திலேயே கண்டறியப்பட்ட முக்கிய அறிகுறிகளில் ஒன்றாகும். ஆனால் அதன் பிறகு 4 ஆண்டாகியும், கொரோனாவால் இழந்த வாசனை நுகரும் திறனை மீட்டெடுப்பதில் தொடர்ந்து சிக்கல் நீடித்து வருகிறது. இந்நிலையில், விபத்தில் உடல் பாகங்கள் பாதிக்கப்படும் போது, பிஸியோதெரபி மூலம் உடற்பயிற்சி செய்து மீண்டும் பழைய நிலைக்கு திரும்புவதைப் போல வாசனை பயிற்சி செய்தால் இழந்த நுகரும் தன்மை பெற முடியும் என ஆரம்பத்தில் நம்பப்பட்டது.

ஆனால், 3 மாத வாசனை பயிற்சிக்குப் பிறகு அதில் பங்கேற்பவர்கள் எண்ணிக்கை 88 சதவீதமாக குறைந்ததாகவும், 6 மாதங்களுக்குப் பிறகு 56 சதவீதமாக சரிந்ததாகவும் சில ஆய்வுகள் தெரிவிக்கின்றன. அதாவது, 3, 6 மாத பயிற்சிக்குப் பிறகும் வாசனை நுகரும் திறனில் எந்த முன்னேற்றத்தையும் பெறாதவர்கள் இப்பயிற்சியில் இருந்து விலகி உள்ளனர். இந்த விஷயத்தில் மருத்துவ உலகம் இன்னமும் பல்வேறு சிகிச்சை முறைகளை தொடர்ந்து ஆய்வு செய்து வருகிறது. வாசனை பயிற்சி நீண்டகாலத்திற்கு பிறகு பலனை தரும் என்றே இதுவரை நம்பப்படுகிறது. இதை விட சிறந்த சிகிச்சையை உலகம் முழுவதும் உள்ள மருத்துவ ஆய்வாளர்கள் தொடர்ந்து ஆராய்ச்சிகளை மேற்கொண்டு வருகின்றனர்.

Kokila

Next Post

தமிழகத்தில் பிப்.1 முதல் விலை உயர்வு!… டாஸ்மாக் நிர்வாகம் திட்டம்!

Sun Jan 28 , 2024
தமிழக அரசுக்கு கிடைக்கும் வருவாயில் குறிப்பிடத்தக்க பகுதியை பெற்றிருக்கிறது டாஸ்மாக். தனியார் வசம் ஒப்படைக்காமல் மதுபானங்கள் விற்பனையை அரசே ஏற்று நடத்தி வருகிறது. சாதாரண வகையில் 43 பிராண்ட்களையும், மீடியம் ரேஞ்சில் 128 பிரீமியம் பிராண்ட்களையும், 35 வகையான பீர், 13 ஒயின் ஆகியவற்றை டாஸ்மாக் கடைகள் விற்பனை செய்யப்படுகின்றன. இதுதவிர வெளிநாட்டு மதுபானங்கள் எலைட் டாஸ்மாக் கடைகள் மூலம் பிரத்யேகமாக விற்கப்படுகின்றன. ஒவ்வொரு ஆண்டும் மதுபானங்களின் விற்பனை அதிகரித்த […]

You May Like