fbpx

BREAKING: விஜயகாந்துக்கு கொரோனா தொற்று உறுதி…! மூச்சு விடுவதில் சிரமம்…!

உடல் நலக்குறைவு காரணமாக தேமுதிகநிறுவனத் தலைவர் விஜயகாந்த் மீண்டும் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். சென்னையில் உள்ள மியாட் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு, அங்கு சிகிச்சை பெற்று வருகிறார். ஏற்கெனவே மருத்துவமனையில் மூன்று வார காலம் சிகிச்சை பெற்று வந்த அவர் கடந்த 12-ம் தேதி வீடு திரும்பினார். தொடர்ந்து தேமுதிக பொதுக்குழு கூட்டத்தில் பங்கேற்றார்.

இந்நிலையில், அவர் மீண்டும் மியாட் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். தற்போது அவருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இது குறித்து வெளியிடப்பட்டுள்ள செய்தி குறிப்பில்; மருத்துவ பரிசோதனையில் கேப்டன் அவர்களுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. மூச்சு விடுவதில் சிரமம் இருப்பதால் வெண்டிலேட்டர் சிகிச்சை கொடுக்கப்படுகிறது என தெரிவிக்கப்பட்டுள்ளது.

தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்ட அவருக்கு சில நேரங்களில் சுயமாக சுவாசிப்பதில் சிரமம் இருந்ததால் அந்த நேரங்களில் செயற்கை சுவாசம் அளிக்கப்பட்டது. நுரையீரல் நிபுணர்கள் அவரை கண்காணித்து சிகிச்சை அளித்தனர். இந்நிலையில், உடல்நிலையில் நல்ல முன்னேற்றம் ஏற்பட்டதால், மருத்துவமனையில் இருந்து கடந்த 12-ம் தேதி தான் விஜயகாந்த் வீடு திரும்பினார் என்பது குறிப்பிடத்தக்கது

Vignesh

Next Post

2024 தேர்தல்!… பிரதமரின் மெகா பிளான்!… கிலோ ரூ.25க்கு மலிவு விலை 'பாரத் அரிசி' விற்பனை!

Thu Dec 28 , 2023
நாளுக்குநாள் அதிகரித்து வரும் அத்தியாவசிய உணவுப் பொருட்களின் விலையை கட்டுக்குள் வைக்கும் வகையில் கிலோ ரூ.25க்கு ‘பாரத் அரிசி’ என்ற பெயரில் மலிவு விலையிலான அரிசியை அறிமுகம் செய்வது குறித்து மத்திய அரசு ஆலோசித்து வருவதாக தகவல் வெளியாகியுள்ளது. நாட்டில் ஏற்கெனவே பாரத் ஆட்டா (கோதுமை மாவு) கிலோ ரூ.27.50, பாரத் டால் (பருப்பு வகைகள்) கிலோ ரூ.60 என தள்ளுபடி செய்யப்பட்ட விலையில் விற்பனை செய்யப்பட்டு வருகிறது. அதேபோல் […]

You May Like