fbpx

Corbevax தடுப்பூசிக்கு உலக சுகாதார அமைப்பு அவசரகால ஒப்புதல்!

இந்தியாவிலேயே முதன்முதலாக உள்நாட்டிலேயே உருவாக்கப்பட்ட கொரோனா தடுப்பூசியான Corbevax தடுப்பூசியை, அவசரகால பயன்பாட்டுக்கான தடுப்பூசிகளின் பட்டியலில் உலக சுகாதார அமைப்பு சேர்த்துள்ளது.

உலக அளவில் பெரும் பொருளாதார இழப்பையும் அரசியல் ஸ்திரத்தன்மை அற்ற சூழ்நிலையும் உருவாக்கியது கொரோனா வைரஸ். 2019ஆம் ஆண்டு கண்டறியப்பட்ட இந்த வைரஸ் உலகம் முழுவதும் லட்சக்கணக்கான மக்களை காவு வாங்கியது. அடுத்தடுத்து உருமாற்றம் அடைந்த கொரோனா வைரஸ் கடந்த 2023 டிசம்பரில் மீண்டும் ஆட்டத்தை துவங்கி ஆங்காங்கே பாதிப்பை அதிகரித்து வருகிறது. இந்தநிலையில், Corbevax தடுப்பூசிக்கு உலக சுகாதார அமைப்பு அவசரகால ஒப்புதல் வழங்கப்பட்டுள்ளது

இந்தியா மருந்து நிறுவனமான Biological E Limited மூலம் Corbevax தடுப்பூசி தயாரிக்கப்படுகிறது. இதுகுறித்து பயோலாஜிக்கல் இ லிமிடெட் நிர்வாக இயக்குனர் மஹிமா தட்லா கூறியதாவது, உலக சுகாதார அமைப்பின் அவசரகால பயன்பாட்டு பட்டியல் சேர்க்கப்பட்டதில் நாங்கள் மகிழ்ச்சியடைகிறோம், ஏனெனில் இது பொது சுகாதாரத்தை பாதிக்கத் தொடங்கும் போது கொரோனா தடுப்பூசிகளைத் தொடர்ந்து உருவாக்க தளத்தைப் பயன்படுத்த உதவும். WHO இன் இந்த ஒப்புதல் கோவிட்-19 க்கு எதிரான எங்கள் உலகளாவிய போராட்டத்தை வலுப்படுத்தும் என்று நாங்கள் நம்புகிறோம் என்று கூறினார்.

டிசம்பரில் 2021 முதல் ஏப்ரல் 2022 வரை வரிசையாக பெரியவர்கள், குழந்தைகளிடையே வைரஸ் பரவல் அதிகரித்ததையடுத்து, பூஸ்டர் டோஸாக கோர்பேவாக்ஸ் தடுப்பூசியை 18-வயதுக்கு மேற்பட்டவர்களும் செலுத்திக்கொள்ள இந்திய மருந்து கட்டுப்பாட்டு ஒழுங்குமுறை ஆணையம் அனுமதி அளித்துள்ளது. இதையடுத்து, 100 மில்லியன் டோஸ் கோர்பேவாக்ஸை மத்திய அரசுக்கு மருந்து தயாரிப்பு நிறுவனம் வழங்கியது, பின்னர் அவை பான்-இந்திய நோய்த்தடுப்பு பிரச்சாரங்களில் பயன்படுத்தப்பட்டன என்றும் மஹிமா தட்லா குறிப்பிட்டார். இருப்பினும், உலகளவில் உயர்தர மற்றும் மலிவு விலையில் தடுப்பூசிகளை உருவாக்குவதற்கும் அணுகுவதற்கும் BE தொடர்ந்து உறுதியுடன் உள்ளதாகவும் தட்லா தெரிவித்தார்.

Kokila

Next Post

நாளையும் (ஜனவரி 18) அரசு விடுமுறையா..? எதிர்பார்ப்பில் ஊழியர்கள், மாணவர்கள்..!! வெளியாகும் அறிவிப்பு..?

Wed Jan 17 , 2024
தமிழ்நாட்டில் பொங்கல் பண்டிகை கோலாகலமாக கொண்டாடப்பட்டு வருகிறது. வெளியூர்களில் பணிபுரிபவர்கள், மாணவ-மாணவிகள் உள்ளிட்டோர் பொங்கல் பண்டிகையை சிறப்பாக கொண்டாடுவதற்காக தங்களது சொந்த ஊர்களுக்கு சென்றுள்ளனர். இதற்காக தமிழ்நாடு அரசின் போக்குவரத்துத்துறை சார்பில் சிறப்பு பேருந்துகள் இயக்கப்பட்டு வருகிறது. இந்நிலையில், பொங்கல் விடுமுறை ஜனவரி 15ஆம் தேதி முதல் ஜனவரி 17ஆம் தேதி (இன்று) வரை வழங்கப்பட்டுள்ள நிலையில், சொந்த ஊருக்கு சென்ற அரசு மற்றும் தனியார் ஊழியர்கள், மாணவர்கள் மீண்டும் […]

You May Like