உலகளவில் ஐந்தில் ஒருவர் புற்றுநோயால் பாதிக்கப்படும் அபாயம் உள்ளது. ஒன்பது ஆண்களில் ஒருவரும் 12 பெண்களில் ஒருவரும் இதனால் உயிரை இழக்கும் அபாயத்தில் உள்ளனர் என்று உலக சுகாதார நிறுவனம் அதிர்ச்சி தகவலை வெளியிட்டுள்ளது. சர்வதேச அளவில் புற்றுநோய் பாதிப்புகள் குறித்து ஆய்வு செய்யும், உலக சுகாதார நிறுவனத்தின் ஐ.ஏ.ஆர்.சி., எனப்படும் புற்றுநோய்க்கான சர்வதேச நிறுவனம் (IARC) வெளியிட்டுள்ள அறிக்கையில், இந்தியாவில் புற்றுநோய் பாதிப்புகள் கவலையளிக்கின்றன. 2022 ஆம் ஆண்டில், […]

இந்தியாவிலேயே முதன்முதலாக உள்நாட்டிலேயே உருவாக்கப்பட்ட கொரோனா தடுப்பூசியான Corbevax தடுப்பூசியை, அவசரகால பயன்பாட்டுக்கான தடுப்பூசிகளின் பட்டியலில் உலக சுகாதார அமைப்பு சேர்த்துள்ளது. உலக அளவில் பெரும் பொருளாதார இழப்பையும் அரசியல் ஸ்திரத்தன்மை அற்ற சூழ்நிலையும் உருவாக்கியது கொரோனா வைரஸ். 2019ஆம் ஆண்டு கண்டறியப்பட்ட இந்த வைரஸ் உலகம் முழுவதும் லட்சக்கணக்கான மக்களை காவு வாங்கியது. அடுத்தடுத்து உருமாற்றம் அடைந்த கொரோனா வைரஸ் கடந்த 2023 டிசம்பரில் மீண்டும் ஆட்டத்தை துவங்கி […]

உலகளவில் வெறிநாய்க்கடியால் பலியானவர்களில் எண்ணிக்கை அடிப்படையில் 36% பேர் இந்தியர்களாக உள்ளனர் என்றும் இதற்கு காரணம் போதிய விழிப்புணர்வு இல்லாததே என்றும் உலக சுகாதார அமைப்பு தெரிவித்துள்ளது. நாய்கள் கடிப்பதன் மூலம் ஏற்படும் ரேபிஸ் நோய் பாதிப்புக்குள்ளாகி இறப்பவர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இதற்கு முக்கிய காரணம், சரியான நேரத்தில் நாய்களுக்கு தடுப்பூசி போடாதது தான். ரேபிஸ் நோயைத் தடுப்பதற்கான ஒரே தீர்வு, நாய்களுக்கு தடுப்பூசி போடுவது […]

உலகம் முழுவதும் கடந்த ஒரே மாதத்தில் கொரோனா உறுதி செய்யப்பட்டவர்களின் எண்ணிக்கை 52 சதவீதம் அதிகரித்துள்ளது என்று உலக சுகாதார நிறுவனம் தெரிவித்துள்ளது. உலகம் முழுவதும் கொரோனா உறுதி செய்யப்பட்டவர்களின் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வருகிறது. இதுகுறித்து உலக சுகாதார நிறுவனம் வெளியிட்ட அறிவிப்பில், ‘உலகம் முழுவதும் கடந்த ஒரு மாதத்தில் கொரோனா உறுதி செய்யப்பட்டவர்களின் எண்ணிக்கை 52 சதவிகிதம் அதிகரித்துள்ளது. சமீபகாலமாக புதிய வகை உருமாறிய கொரோனா ‘ஜெஎன்.1’ […]

டெங்கு பாதிப்பு அதிகரித்து வரும் நிலையில் டெங்கு நோய் குறித்த வழிகாட்டு நெறிமுறைகளை உலக சுகாதார நிறுவனம் வெளியிட்டுள்ளது. பருவமழைக்கால நோய்கள் அதிகரித்து வருகின்றன. இதன் காரணமாக தலைவலி, காய்ச்சல், சளி, இருமல், உடல்வலியுடன் மக்கள் கடும் அவதிப்பட்டு வருகிறார்கள். இதனால் மருத்துவமனைகளில் டெங்கு வார்டுகள் நிரம்பி வழிகின்றன. காய்ச்சலுக்காக சிகிச்சை பெறுபவர்களின் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வருகிறது. செப்டம்பர் மாதத் தொடக்கத்திலிருந்தே வெயில், மழை என மாறி மாறி […]

உலகளவில் பறவைக் காய்ச்சல் தொற்று வேகமாக பரவிவருவதால், அனைத்து நாடுகளும் அதிக விழிப்புடன் இருக்கவேண்டும் என்று உலக சுகாதார நிறுவனம் எச்சரிக்கை விடுத்துள்ளது. உலகம் முழுவதும் பறவைக்காய்ச்சல் தொற்றின் வேகம் அதிகரித்து வருகிறது. குறிப்பாக H5N1 வகையை சேர்ந்த பறவைக்காய்ச்சலால் ஆங்காங்கே உயிரிழப்புகள் ஏற்பட்டுவருகின்றன. அதன்படி, கடந்த மாதம் ஈக்வடாரை சேர்ந்த சிறுமிக்கு H5N1 வகை தொற்று உறுதிசெய்யப்பட்டது. இதையடுத்து சிறுமிக்கு இருமல், தொண்டை கரகரப்பு, போன்ற அறிகுறிகள் மற்றும் […]

ஸ்மார்ட்போன்களின் பயன்பாடு மற்றும் மின்னணு சாதனங்கள் உடலுக்கு தீங்கு விளைவிக்கக்கூடும். அவை புற்றுநோயை உருவாக்கும் வாய்ப்புகளை அதிகரிக்கும் என்று உலக சுகாதார நிறுவனம் எச்சரிக்கை விடுத்துள்ளது. பெரியவர்கள் முதல் குழந்தைகள் என அனைவரிடமும் ஸ்மார்ட் போன்களின் பயன்பாடு நாளுக்கு நாள் அதிகரித்துக்கொண்டே செல்கிறது. இதனால் ஏற்படும் விளைவுகளை பற்றி தெரியாமல், குழந்தைகள் அதிகளவில் உபயோகப்படுத்தி வருகின்றனர். பகல் நேரங்களில் எவ்வளவு தான் போன்களை பார்த்துக்கொண்டிருந்தாலும், இரவு தூங்குவதற்கு முன்பு வரை […]