fbpx

கள்ளச்சாராய விவகாரம்..!! உயிரிழந்தோர் குடும்பத்திற்கு தலா ரூ.1 லட்சம் நிதியுதவி..!! அண்ணாமலை அறிவிப்பு..!!

கள்ளக்குறிச்சியில் கள்ளச்சாராயம் அருந்தி உயிரிழந்தவர்கள் குடும்பத்திற்கு பாஜக சார்பில் ஒரு லட்சம் ரூபாய் வழங்கப்படும் என அண்ணாமலை அறிவித்துள்ளார்.

கள்ளக்குறிச்சியில் கள்ளச்சாராயத்தால் பாதிக்கப்பட்டோரை நேரில் சந்தித்து ஆறுதல் கூறிய பின், செய்தியாளர்களிடம் பேசிய அவர், ”கள்ளக்குறிச்சியில் கள்ளச்சாராயம் அருந்தி 38 பேர் உயிரிழந்துள்ளனர். 80-க்கும் மேற்பட்டோர் சிகிச்சை பெற்று வருகின்றனர். கள்ளக்குறிச்சியில் பாக்கெட், பாக்கெட்டாக சாராயம் விற்பனை நடைபெற்றிருப்பதை, அரசு வேடிக்கை பார்த்திருப்பதால் துயரம் நேர்ந்துள்ளது.

நீதிமன்றம், காவல் நிலையம் இருக்கும் இடத்திலேயே சாராய விற்பனை அமோகமாக கிடைக்கிறது. கிராம பகுதியில் கள்ளச்சாராய உயிரிழப்பு நடக்கவில்லை. நகரின் மையப்பகுதியில் நடந்துள்ளது. அரசின் மெத்தனப்போக்கை இது வெளிப்படுத்துகிறது. அரசை பாதுகாப்பதே ஆட்சியர்களின் வேலையாக உள்ளது. கள்ளச்சாராயத்தால் உயிரிழந்த ஒவ்வொரு குடும்பத்தினருக்கும் தலா ரூ.1 லட்சம் பாஜக சார்பாக வழங்கப்படும்.

அவர்களின் குழந்தைகளின் கல்விச் செலவுக்கு நிதியுதவி கொடுக்கப்படும். கள்ளச்சாராயம் விவகாரம் தொடர்பாக விவரங்களை சேகரித்து அறிக்கையை சமர்பிக்குமாறு உள்துறை அமைச்சர் அமித்ஷா கூறியுள்ளார்” என்றார்.

Read More : கள்ளச்சாராய நிகழ்வை நாங்கள் நியாயப்படுத்தவில்லை..!! தவறு தான்..!! அமைச்சர் எ.வ.வேலு பரபரப்பு பேட்டி..!!

English Summary

Annamalai has announced that BJP will give one lakh rupees to the families of those who died after drinking liquor in Kallakurichi.

Chella

Next Post

ஆண்கள் இல்லாத உலகம் எப்படி இருக்கும்? 29 ஆண்டுகளாக பெண்கள் மட்டுமே வாழும் ஒரு கிராமம்!!

Thu Jun 20 , 2024
As only women live in the village of Umoja, Kenya, this post takes a look at their lifestyle

You May Like