fbpx

டிஜிட்டல் அச்சுறுதல்களுக்கு எதிர் நடவடிக்கை!. சவாலை வாய்ப்பாக மாற்றுங்கள்!. பிரதமர் மோடி அழைப்பு!

PM Modi: நம் நாட்டின் செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பம், லட்சிய இந்தியா என்ற இரட்டை ஏ.ஐ.,யை பயன்படுத்தும்படியும், இந்த சவாலை ஒரு வாய்ப்பாக மாற்றும்படியும் போலீஸ் தலைமைக்கு பிரதமர் மோடி அழைப்பு விடுத்துள்ளார்.

நாடு முழுதும் உள்ள போலீஸ் டி.ஜி.பி., மற்றும் ஐ.ஜி.,க்களின் 59வது அனைத்திந்திய மாநாடு, ஒடிசாவில் மூன்று நாட்கள் நடந்து முடிந்தது. இதன் நிறைவு விழாவில் பிரதமர் மோடி பேசியதாவது, டிஜிட்டல் மோசடிகள், சைபர் கிரைம்கள் மற்றும் ஏ.ஐ., எனப்படும், செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பம் வாயிலாக அரங்கேறும் அச்சுறுத்தல்களுக்கு எதிர் நடவடிக்கையாக, நம் நாட்டின் செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பம், லட்சிய இந்தியா என்ற இரட்டை ஏ.ஐ.,யை பயன்படுத்தும்படியும், இந்த சவாலை ஒரு வாய்ப்பாக மாற்றும்படியும் போலீஸ் தலைமைக்கு அழைப்பு விடுக்கிறேன்.

தொழில்நுட்பங்களை பயன்படுத்தி போலீசின் பணியை சுலபமாக்குவது அவசியம். நகர்ப்புறங்களில் போலீஸ் பணி மேம்படுத்தப்பட்டுள்ளது பாராட்டுக்குரியது. இவற்றை நாட்டின் 100 நகரங்களுக்கு விரிவுபடுத்த வேண்டும். டிஜிட்டல் மோசடிகள், சைபர் குற்றங்கள் அதிகரிக்க துங்கியுள்ளன. ஏ.ஐ., தொழில்நுட்பத்தால் உருவாக்கப்படும் டீப் பேக் மோசடிகள் சமூக மற்றும் குடும்ப உறவுகளை சீர்குலைக்கின்றன. இது மிகுந்த கவலை அளிக்கிறது. அதே தொழில்நுட்பத்தின் உதவியுடன் இதை முறியடிக்க வேண்டும் என்று அறிவுறுத்தியுள்ளார்.

Readmore: பல கோடிக்கு அதிபதி.. சொகுசு வாழ்க்கையை உதறி வாடகை வீட்டில் வசிக்கும் பார்த்திபன்..!! சொத்து மதிப்பு தெரியுமா?

English Summary

Countermeasures to Digital Threats! Turn Challenge into Opportunity!. Prime Minister Modi’s call!

Kokila

Next Post

ஆசிய ஹாக்கி!. தொடக்கம் முதலே அதிரடி!. அரையிறுதிக்கு முன்னேறிய இந்திய அணி!.

Mon Dec 2 , 2024
Asian Hockey!. Action from the start! The Indian team advanced to the semi-finals!

You May Like