fbpx

இன்னும் சற்று நேரத்தில் வாக்கு எண்ணிக்கை..! முதல் தேர்தல்.., சாதிக்குமா “இந்தியா” கூட்டணி..!

கேரளா, திரிபுரா, ஜார்க்கண்ட், மேற்கு வங்கம், உத்தரப்பிரதேசம், உத்தராகண்ட் ஆகிய 6 மாநிலங்களில் காலியாக உள்ள 7 தொகுதிகளில் நடைபெற்ற இடைத்தேர்தல்கள் முடிவு இன்று வெளியீடு. காலை 8 மணி முதல் வாக்கு எண்ணிக்கை தொடங்குகிறது.

2024 ஆம் ஆண்டு மக்களவைத் தேர்தலுக்கு முன்னதாக பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணிக்கும் எதிர்க்கட்சிகளின் இந்திய கூட்டணிக்கும் இடையே நடைபெறும் முதல் தேர்தல் என்பதால் இது பெரிதும் எதிர்பார்க்கப்படுகிறது.

செப்டம்பர் 5ஆம் தேதி 6 மாநிலங்களில் காலியாக உள்ள 7 தொகுதிகளில் நடைபெற்ற இடைத்தேர்தலில் இந்தியா கூட்டணி உத்தரபிரதேசத்தில் உள்ள கோசி தொகுதி, ஜார்கண்டின் டும்ரி மற்றும் தன்பூர் தொகுதிகள், திரிபுராவில் உள்ள போக்ஸாநகர், உத்தரகாண்டின் பாகேஷ்வர்தொகுதி ஆகிய 5 தொகுதிகளில் ஒருங்கிணைந்து இந்த இடைத்தேர்தலை சந்தித்தது. மேலும் மேற்கு வங்கத்தில் உள்ள துப்குரி தொகுதி மற்றும் கேரளாவின் புதுப்பள்ளி தொகுதியில் இந்தியா கூட்டணி தனித்து போட்டியிட்டது.

இந்த 7 தொகுதிகளுக்கான இடைத்தேர்தல் வாக்குப்பதிவு கடந்த 5ஆம் தேதி காலை 7 மணி முதல் மாலை 6 மணி வரை நடைபெற்றது. இதன் தொடர்ச்சியாக வாக்குபதிவு இன்று கால 8 மணிக்கு தொடங்கி நடைபெறவுள்ளது.

Kathir

Next Post

கார்டே தேவையில்லை!… யுபிஐ மூலம் ஏடிஎம்-ல் பணம் எடுக்கும் வசதி அறிமுகம்!

Fri Sep 8 , 2023
டெபிட் கார்டுகள் உதவியின்றி யுபிஐ மூலம் ஏடிஎம்-ல் பணம் எடுக்கும் புதிய வசதி அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இந்நிலையில், இதனை பயன்படுத்தி ஒரு நபர் பணம் எடுத்துள்ளார். அந்த வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் பகிரப்பட்டு வருகிறது. இந்தியாவில் பெரும்பாலான நகரங்களில், யுபிஐ மூலம் கூகுள் பே, போன் பே உள்ளிட்ட செயலிகளை பயன்படுத்தி, மக்கள் ஆன்லைன் பணப்பரிவர்த்தனை செய்து வருகின்றனர். சில்லறை வணிக கடைகள் முதல் பெரிய கடைகள் வரை […]

You May Like